நாகர்கோவில்ஆயுதப்படை முகாமில் பொங்கல் விளையாட்டு போட்டிகள் தொடக்கம் இன்று காவல் நிலைய போலீசாருக்கு நடக்கிறது

நாகர்கோவில், ஜன.12: நாகர்கோவில் ஆயுதப்படை முகாமில் பொங்கலை முன்னிட்டு விளையாட்டு போட்டிகள் நேற்று காலை தொடங்கின. குமரி மாவட்ட காவல்துறை சார்பில், பொங்கலை முன்னிட்டு விளையாட்டு போட்டிகள் நடத்த எஸ்.பி சுந்தரவதனம் உத்தரவிட்டுள்ளார். இதன்படி, கோகோ, இறகுபந்து, கால்பந்தாட்டம் மற்றும் தடகள போட்டிகள் ஆண்கள் மற்றும் பெண்களுக்கு தனித்தனியாக நடைபெறுகிறது. முதல் நாளான நேற்று ஆயுதப்படை முகாமில் உள்ள போலீசாருக்கு நடைபெற்றது. போட்டிகளை நேற்று காலை 8 மணிக்கு ஏடிஎஸ்பி (நிர்வாகம்) சுப்பையா தொடங்கி வைத்தார். காலை மற்றும் மாலையில் போட்டிகள் நடைபெறுகின்றன. இன்று (12ம்தேதி) காவல் நிலையங்களில் பணியாற்றும் போலீசாருக்கும், நாளை போலீசார் குடும்பத்தினருக்கும் போட்டிகள் நடைபெற உள்ளன. போட்டியில் வெற்றி பெற்றவர்களுக்கு பரிசுகள் மற்றும் சான்றிதழ்களை எஸ்.பி சுந்தரவதனம் வழங்குகிறார்.

The post நாகர்கோவில்ஆயுதப்படை முகாமில் பொங்கல் விளையாட்டு போட்டிகள் தொடக்கம் இன்று காவல் நிலைய போலீசாருக்கு நடக்கிறது appeared first on Dinakaran.

Related Stories: