ஆன்மிகம் பிட்ஸ்: வேலை வாய்ப்பு ஆஞ்சநேயர்

நன்றி குங்குமம் ஆன்மிகம்

சங்கு சக்கர ஆஞ்சநேயர்

வட ஆற்காடு மாவட்டம் சோளிங்கர் கிராமத்திலுள்ள ஆஞ்சநேயர் கோயிலிலுள்ள ஆஞ்சநேயர் நான்கு திருக்கரங்களுடன், சங்குசக்கரம், ஏந்தி காட்சி தருகிறார். அபூர்வமான அமைப்பு இது.

குழந்தை வடிவில் ஆஞ்சநேயர்

திருத்தணி, திருப்பதி நெடுஞ்சாலையில் அமைந்துள்ள நல்லாட்டூர் கிராமத்தில் ஸ்ரீவீரமங்கள் ஆஞ்சநேயர் ஆலயம் அமைந்துள்ளது. இங்கு ஆஞ்சநேயர் துள்ளி விளையாடும் குழந்தை வடிவில் காட்சி தருகிறார்.

வேலை வாய்ப்பு ஆஞ்சநேயர்

பெங்களூருவில் சேஷாத்திரிபுரம் எனும் இடத்தில் இருக்கும் பால ஆஞ்சநேயர், வேலை வாய்ப்புக்கு அருள்கிறார். இவருக்கு அர்ச்சனை செய்து, சில ஏழைகளுக்கு அன்னதானம் அளித்தால் வேலை வாய்ப்பு உண்டாகும் என நம்பப்படுகிறது. மிகச் சிறிய கோயில்தான். ஆனாலும், கீர்த்திமிக்கது.

படிப்பு ஆஞ்சநேயர்

பெங்களூரு ஜெயநகரில் பிரசன்ன ஆஞ்சநேயர் அருள்கிறார். இவரை, ராகி குட்டா ஆஞ்சநேயர் என்கிறார்கள். சிறிய குன்றின் மீது நின்றிருக்கும் இந்த ஆஞ்சநேயர், பக்தர்கள் அனைவருக்கும் பல நன்மைகள் அருளி மகிழச் செய்கிறார். இவருக்கு அர்ச்சனை செய்து சில ஏழைகளுக்கு அன்னதானம் வழங்கினால் குழந்தைகள் படிப்பில் முன்னேற்றம் காண்பார்கள் என்கிறார்கள்.

யோக நிலையில் ஆஞ்சநேயர்

ஆஞ்சநேயர் பொதுவாக எல்லா ஆலயங்களிலும் நின்ற நிலையில்தான் காட்சி தருவார். ஆனால், வேலூர் மாவட்டம் சோளிங்கர் தலத்தில் சங்கு, சக்கரத்தோடு மேற்கு திசை நோக்கி யோக நிலையில் காட்சி தருகிறார்.

கூத்தாடும் ஆஞ்சநேயர்

108 வைணவ திவ்ய தேசத்தில் ஒன்றான திருக்கூடலூரிலுள்ள பெருமாள் கோயிலின் முன்புறம் உள்ள சிறு சந்நதியில் கூத்தாடும் ஆஞ்சநேயரை தரிசிக்கலாம்.

தொகுப்பு: ஜெயசெல்வி

The post ஆன்மிகம் பிட்ஸ்: வேலை வாய்ப்பு ஆஞ்சநேயர் appeared first on Dinakaran.

Related Stories: