மூல வைகை ஆற்றில் வெள்ளப்பெருக்கால் கிராமத்தில் புகுந்த மழைநீர்: பொதுமக்கள் வெளியேற்றம்

வருசநாடு: மூல வைகை ஆற்றில் ஏற்பட்ட வெள்ளப்பெருக்கால், மயிலாடும்பாறை கிராமத்தில் மழைநீர் புகுந்தது. முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக வீடுகளில் இருந்து பொதுமக்கள் வெளியேற்றப்பட்டனர். தேனி மாவட்டத்தில் நேற்று பெய்த கனமழையால் மூல வைகை ஆற்றில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டது.
இதனால், ஆற்றை ஒட்டிய கிளை ஓடைகளிலும் வெள்ளம் கரைபுரண்டு ஓடியது. இந்நிலையில், வருசநாடு அருகே, மயிலாடும்பாறை கிராமத்தின் அருகே உள்ள சுக்கான் ஓடையில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டது.

இந்த தண்ணீர் அப்பகுதியில் உள்ள பெரியகுளம் கண்மாய்க்கு திருப்பி விடப்பட்டது. இந்த கண்மாய் நிரம்பி மறுகால் பாய்ந்த மழைநீர் மயிலாடும்பாறை கிராமத்திற்குள் நேற்று மாலை புகுந்தது. முன்னதாக போலீசார் மற்றும் தீயணைப்புத்துறையினர் கிராமத்தில் உள்ள பொதுமக்களை பாதுகாப்பாக வெளியேற்றினர். கிராமத்தில் திடீரென மழைநீர் புகுந்ததால் பரபரப்பு ஏற்பட்டது. மூல வைகை ஆற்றில் ஏற்பட்ட வெள்ளப்பெருக்கால், வைகை அணைக்கு நீர்வரத்து மேலும் அதிகரித்துள்ளது. இதனால், கூடுதல் உபரி நீர் திறக்கப்படும் என பொதுப்பணித்துறை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

The post மூல வைகை ஆற்றில் வெள்ளப்பெருக்கால் கிராமத்தில் புகுந்த மழைநீர்: பொதுமக்கள் வெளியேற்றம் appeared first on Dinakaran.

Related Stories: