குளித்தலையில் நெடுஞ்சாலை, ஊரகப்பணித்துறை பணியாளர்கள் கூட்டுறவு சிக்கன நாணய சங்க பேரவை கூட்டம்

குளித்தலை, ஜன.10:கரூர் மாவட்டம் நெடுஞ்சாலைத்துறை மற்றும் ஊரக பணித்துறை பணியாளர்கள் கூட்டுறவு சிக்கன நாணய சங்கத்தின் 2024ம் ஆண்டு பேரவை கூட்டம் குளித்தலை பயணியர் விடுதி வளாகத்தில் நடைபெற்றது. கூட்டத்திற்கு சங்கச் செயலாளர் கண்மணி தலைமை வகித்தார். முன்னாள் சங்கத் தலைவர் விஜயகுமார் வரவேற்றார் . செயலாட்சியர் மல்லிகா முன்னிலை வகித்தார். குளித்தலை, தோகைமலை வட்டார ஆசிரியர் கூட்டுறவு சிக்கன நாணய சங்க செயலாளர் சாமிநாதன் சிறப்பு அழைப்பாளராக கலந்து கொண்டு சங்க நடைமுறை விதிகளை பற்றி விளக்கி பேசி உறுப்பினர்களுக்கு டிவி டெண்ட் தொகைக்கான உத்தரவை வழங்கினார். முன்னாள் தலைவர் வாழ்த்தி பேசினார். இதில் 2022ம் ஆண்டிற்கான தணிக்கை அறிக்கை ஒப்புதல் பெறப்பட்டது. 2023ம் ஆண்டிற்கான நிகர லாபத்தை கூட்டுறவு சங்கங்களின் சட்ட மற்றும் விதிகளுக்கு உட்பட்டு லாபப்பிரிவினை செய்யப்பட்டு ஒப்புதல் பெறப்பட்டது. சங்கத்தின் துணைவிதி மற்றும் சிறப்பு துணைவிதி திருப்பம் செய்வது தொடர்பாக விவாதிக்கப்பட்டது. சங்கத்தின் 2023-24ம் ஆண்டிற்கான உத்தேச வரவு செலவு திட்டத்தை அங்கீகரிப்பது உள்ளிட்ட பொருள் குறித்து விவாதிக்கப்பட்டது. முடிவில் அலுவலக உதவியாளர் சேகர் நன்றி கூறினார்.

The post குளித்தலையில் நெடுஞ்சாலை, ஊரகப்பணித்துறை பணியாளர்கள் கூட்டுறவு சிக்கன நாணய சங்க பேரவை கூட்டம் appeared first on Dinakaran.

Related Stories: