போக்குவரத்து தொழிலாளர்கள் ஸ்ட்ரைக்கிற்கும், அதிமுகவுக்கும் எந்த தொடர்பும் இல்லை: அதிமுக முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் பேட்டி

சென்னை: தமிழகம் முழுவதும் ஏஐடியுசி,சிஐடியு, டிடிஎஸ்எப், எச்எம்எஸ்,எம்எல்எப் தொழிற்சங்கங்கள் சார்ந்த தொழிலாளர்கள் வேலை நிறுத்தத்தில் ஈடுபட்டு வருகின்றனர். தொழிலாளர் தனி இணை ஆணையர் மற்றும் மாநகர் போக்குவரத்து கழக நிர்வாக இயக்குனர், அரசு விரைவு போக்குவரத்து கழக நிர்வாக இயக்குனர் மற்றும் நிர்வாகங்கள் இவர்களோடு- மூன்று கட்ட பேச்சுவார்த்தை நடைபெற்றுள்ளது. எவ்வித முன்னேற்றமும் இல்லை. இந்நிலையில் நேற்று இரவு 12 மணியிலிருந்து வேலை நிறுத்தம் தொடங்கியது. 60 சதவீத பேருந்துகள் தற்போது இயக்கப்பட்டு வருகின்றன. இன்று 40 சதவீதத் திற்கும் மேற்பட்ட தொழிலாளர்கள் வேலை நிறுத்தத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.

இந்நிலையில் சென்னையில் நடைபெற்ற அதிமுக மாவட்ட செயலாளர்கள் கூட்டத்துக்கு பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார்; அதிமுக ஆட்சியின் சாதனைகளை மக்களிடம் எடுத்து செல்ல மாவட்ட செயலாளர்கள் கூட்டத்தில் அறிவுறுத்தப்பட்டுள்ளது. ராமர் கோயில் குடமுழுக்கு விழாவில் பங்கேற்க அதிமுகவுக்கு அழைப்பு வந்துள்ளது. அதிமுக ஆதரவு வாக்காளர்களை பட்டியலில் இருந்து நீக்க சதி நடக்கிறது. போக்குவரத்து தொழிலாளர்களின் கோரிக்கையை திமுக அரசு உடனடியாக நிறைவேற்ற வேண்டும். போக்குவரத்து தொழிலாளர்கள் ஸ்ட்ரைக்கிற்கும், அதிமுகவுக்கும் தொடர்பில்லை” என்றார்.

The post போக்குவரத்து தொழிலாளர்கள் ஸ்ட்ரைக்கிற்கும், அதிமுகவுக்கும் எந்த தொடர்பும் இல்லை: அதிமுக முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் பேட்டி appeared first on Dinakaran.

Related Stories: