இதுவரை 44 தொழிற்சாலைகளுக்கு அடிக்கல் நாட்டி, 27 தொழிற்சாலைகளை திறந்து வைத்துள்ளேன்: முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்!

சென்னை: இதுவரை 44 தொழிற்சாலைகளுக்கு அடிக்கல் நாட்டி, 27 தொழிற்சாலைகளை திறந்து வைத்துள்ளேன் என முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார். இளைஞர்கள், மகளிருக்கு 74,757 பேருக்கு வேலைவாய்ப்பு ஏற்படுத்தித் தந்துள்ளோம். தமிழ்நாட்டின் வரலாற்றில் இந்த மாநாடு என்றென்றும் நினைவுகூரப்படும். உலக அளவில் முதலீட்டுக்கு சிறந்த மாநிலமாக தமிழ்நாடு விளங்கி வருகிறது. இறுதி செய்யப்பட்ட முதலீடுகளில் முன்னெப்போதும் இல்லாத அளவாக ரூ.6.64 லட்சம் கோடியை பெற்றுள்ளோம். 14,54,712 லட்சம் பேருக்கு நேரடியாகவும் 12,30,945 பேருக்கு மறைமுகமாகவும் வேலைவாய்ப்பு கிடைக்கும். மிகப்பெரும் உட்கட்டமைப்பு திட்டங்களை மேற்கொள்ளும் போது முழுமையான நிதியை அரசே செலவிடுவது கடினம். 2030-க்குள் ஒரு லட்சம் கோடி அமெரிக்க டாலர் பொருளாதாரமாக தமிழ்நாட்டை மாற்ற இலக்கு என்று கூறியுள்ளார்.

 

 

The post இதுவரை 44 தொழிற்சாலைகளுக்கு அடிக்கல் நாட்டி, 27 தொழிற்சாலைகளை திறந்து வைத்துள்ளேன்: முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்! appeared first on Dinakaran.

Related Stories: