சென்னையில் இன்று 22 கேரட் ஆபரண தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ.160 குறைந்து ரூ.46,640க்கு விற்பனை.! வாடிக்கையாளர்கள் மகிழ்ச்சி

சென்னை: சென்னையில் இன்று 22 கேரட் ஆபரண தங்கத்தின் விலை சவரனுக்கு 160 ரூபாய் குறைந்து ஒரு சவரன் தங்கம் 46 ஆயிரத்து 640 ரூபாய்க்கு விற்பனை செய்யப்பட்டு வருகிறது. சென்னையில் கடந்த சில நாட்களாக தங்கம் விலை தொடர்ந்து குறைந்து வருகிறது. கடந்த சனிக்கிழமை தங்கம் விலை சவரனுக்கு 80 ரூபாய் குறைந்து ஒரு சவரன் தங்கம் 46 ஆயிரத்து 800 ரூபாய்க்கு விற்பனை செய்யப்பட்டது. இதேபோல் ஒரு கிராம் ஆபரண தங்கம் 10 ரூபாய் குறைந்து 5 ஆயிரத்து 850 ரூபாய்க்கு விற்பனை செய்யப்பட்டது.

இந்த நிலையில், இன்றும் தங்கம் விலை குறைந்துள்ளது. சென்னையில் இன்று 22 கேரட் ஆபரண தங்கத்தின் விலை சவரனுக்கு 160 ரூபாய் குறைந்து ஒரு சவரன் தங்கம் 46 ஆயிரத்து 640 ரூபாய்க்கு விற்பனை செய்யப்பட்டு வருகிறது. இதேபோல் ஆபரண தங்கம் கிராமுக்கு 20 ரூபாய் குறைந்து 5 ஆயிரத்து 830 ரூபாய்க்கு விற்பனை செய்யப்பட்டு வருகிறது. தங்கத்தை போல் வெள்ளி விலையும் குறைந்துள்ளது. வெள்ளி விலை கிராமுக்கு ரூ.1.80 காசுகள் குறைந்து ஒரு கிராம் வெள்ளி ரூ.77.80க்கு விற்பனை செய்யப்பட்டு வருகிறது.

The post சென்னையில் இன்று 22 கேரட் ஆபரண தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ.160 குறைந்து ரூ.46,640க்கு விற்பனை.! வாடிக்கையாளர்கள் மகிழ்ச்சி appeared first on Dinakaran.

Related Stories: