அங்கன்வாடி மையங்கள், ரேஷன் கடை திறப்பு விழா

பரமத்திவேலூர், ஜன.8: கபிலர்மலை ஒன்றிய பகுதிகளில் சுமார் ₹50 லட்சம் மதிப்பீட்டில் கட்டப்பட்ட ரேஷன் கடை, அங்கன்வாடி மையங்களை வனத்துறை அமைச்சர் மதிவேந்தன் திறந்து வைத்தார்.கபிலர்மலை ஒன்றியம், பிலிக்கல்பாளையம் ஊராட்சி சின்னாகவுண்டம்பாளையத்தில், ₹12.61 லட்சம் மதிப்பீட்டில் கட்டப்பட்டுள்ள புதிய அங்கன்வாடி மையம், அ.குன்னத்தூர் ஊராட்சி அய்யம்பாளையத்தில் ₹12.61 லட்சத்தில் கட்டப்பட்ட அங்கன்வாடி மையம் மற்றும் ஆனந்தூர் ஊராட்சியில் ₹13.57 லட்சத்தில் கட்டப்பட்ட அங்கன்வாடி மையம் என ₹38.79 லட்சத்தில் கட்டப்பட்டுள்ள 3 அங்கன்வாடி மையங்கள், பிலிக்கல்பாளையம் ஊராட்சி நல்லாகவுண்டம்பாளையத்தில் ₹11.77 லட்சம் மதிப்பீட்டில் கட்டப்பட்டுள்ள ரேஷன் கடை ஆகியவற்றை வனத்துறை அமைச்சர் மதிவேந்தன் திறந்து வைத்தார்.

நிகழ்ச்சியில் நாமக்கல் கலெக்டர் உமா, நாமக்கல் மேற்கு மாவட்ட திமுக செயலாளர் மதுரா செந்தில் ஆகியோர் தலைமை வகித்தனர். இதில், மாவட்ட திட்ட அலுவலர் சிவக்குமார், ஒன்றிய குழு உறுப்பினர் சண்முகம், ஒன்றிய செயலாளர் தனராசு முன்னிலை வகித்தனர். ஊராட்சி மன்ற தலைவர்கள் மணிமேகலை, ரமேஷ், மோகன்ராஜ் வரவேற்றனர். பேரூராட்சி தலைவர்கள் மணி, கருணாநிதி, சோமசேகர், பேரூர் செயலாளர்கள் முருகன், முருகவேல், செயற்குழு உறுப்பினர் ரங்கசாமி, பொதுக்குழு உறுப்பினர் சாமிநாதன் மற்றும் ஊராட்சி மன்ற உறுப்பினர்கள் கலந்து கொண்டனர்.

The post அங்கன்வாடி மையங்கள், ரேஷன் கடை திறப்பு விழா appeared first on Dinakaran.

Related Stories: