வங்கதேசத்தில் ரோஹிங்கியா அகதிகள் முகாமில் பயங்கர தீ: 1000 கூடாரங்கள் எரிந்து சாம்பல்

காக்ஸ் பஜார்: வங்கதேசத்தில் ரோஹிங்கியா அகதிகள் முகாமில் ஏற்பட்ட தீ விபத்தில் 1000க்கும் மேற்பட்ட கூடாரங்கள் எரிந்து சாம்பலாகின. வங்கதேசத்தின் காக்ஸ் பஜார் மாவட்டத்தில் உக்கியாவில் உள்ள குடுபாலோங் பகுதியில் ரோஹிங்கியா அகதிகள் முகாம் அமைந்துள்ளது. இங்கு நேற்று முன்தினம் நள்ளிரவு திடீரென தீப்பிடித்தது. இதில் ஆயிரத்துக்கும் மேற்பட்ட தற்காலிக கூடாரங்கள் தீயில் கருகி சாம்பலாகின. ஆயிரக்கணக்கானோர் வீடுகளை இழந்து தவிப்பதாக ஐ.நா. தெரிவித்துள்ளது.

இது குறித்து உக்கியா தீயணைப்பு நிலைய தலைமை அதிகாரி இஸ்லாம் கூறுகையில், ‘’இந்த தீ விபத்தினால் முகாமில் இருந்த 1,040 கூடாரங்கள் முற்றிலும் எரிந்து சாம்பலாகின. 10 தீயணைப்பு வாகனங்களில் வந்த மீட்பு படையினரின் 2 மணி நேரப் போராட்டத்திற்கு பிறகு தீ கட்டுக்குள் கொண்டு வரப்பட்டது,’’ என்று தெரிவித்தார். கடந்தாண்டு மார்ச் மாதம் ரோஹிங்கியா முகாமில் நடந்த தீ விபத்தில் 3 ஆயிரம் வீடுகள் எரிந்து சாம்பலாகின. 12,000 பேர் வீடுகளை இழந்தனர்.

The post வங்கதேசத்தில் ரோஹிங்கியா அகதிகள் முகாமில் பயங்கர தீ: 1000 கூடாரங்கள் எரிந்து சாம்பல் appeared first on Dinakaran.

Related Stories: