போக்குவரத்து தொழிலாளர் ஸ்டிரைக்கை தடுக்க தொழிற்சங்கத்தினருடன் முதல்வர் பேச வேண்டும்: ஓபிஎஸ் வலியுறுத்தல்

சென்னை: முன்னாள் முதல்வர் ஓ.பன்னீர் செல்வம் நேற்று வெளியிட்ட அறிக்கை: அரசு போக்குவரத்து தொழிலாளர் சங்கங்கள் நாளை முதல் காலவரையற்ற வேலைநிறுத்தத்தில் ஈடுபடப் போவதாக அறிவித்துள்ளன. இதனால் பொங்கல் பண்டிகையின்போது பேருந்துக் கட்டணம் விமானக் கட்டணத்தை மிஞ்சும் நிலை உருவாகும். இதனால் பாதிக்கப்படுவது பொங்கல் பண்டிகையை சொந்தங்களுடன் கொண்டாடவிருக்கும் ஏழை எளிய தமிழக மக்களும், போக்குவரத்துத் தொழிலாளர்களும் தான்.

தொழிற்சங்கங்கள் வேலை நிறுத்தப் போராட்டத்தில் உறுதியாக இருப்பதால், 8ம் தேதி(இன்று) முத்தரப்பு பேச்சுவார்த்தைக்கு தொழிலாளர் ஆணையரகம் அழைப்பு விடுத்துள்ளது. முதல்வர் தலையிட்டால் தான் பிரச்னைக்கு தீர்வு காண முடியும் என்ற நிலை உருவாகியுள்ளது. எனவே, அரசு போக்குவரத்துக் கழக தொழிற்சங்கங்களை முதல்வர் அழைத்துப் பேசி, 15வது புதிய ஊதிய ஒப்பந்த பேச்சுவார்த்தையினை துவங்கவும், ஓய்வு பெற்ற தொழிலாளர்களுக்கு அகவிலைப்படி உயர்வு வழங்கவும் உடனடி நடவடிக்கை எடுத்து, வேலை நிறுத்தத்தை முடிவுக்கு கொண்டு வர வேண்டும்.

The post போக்குவரத்து தொழிலாளர் ஸ்டிரைக்கை தடுக்க தொழிற்சங்கத்தினருடன் முதல்வர் பேச வேண்டும்: ஓபிஎஸ் வலியுறுத்தல் appeared first on Dinakaran.

Related Stories: