மேலும் இந்த புத்தக காட்சியில் தினகரன்- சூரியன் பதிப்பகத்தின் புத்தக அரங்கு எஃப் 29 என்ற எண்ணில் அமைந்துள்ளது. இந்த அரங்கில் கற்பித்தல் என்னும் கலை, வெளித்தெரியா வேர்கள், உணவே மருந்து, தமிழ்நாட்டு நீதிமான்கள், தெரிஞ்ச சினிமா தெரியாத விஷயம் உள்ளிட்ட புத்தகங்கள் விற்பனை செய்யப்படுகின்றன. இவை மட்டுமல்லாது, மாணவர்களுக்கான புத்தகங்கள், மருத்துவம் சார்ந்த புத்தகம், பெண்களுக்கான சிறுகதைகள், சமையல் புத்தகம், ஆன்மிகம் தொடர்பான புத்தகங்கள் உள்ளன. மேலும் 164சி அரங்கில் தினகரன் நாளிதழின் அரங்கும் அமைக்கப்பட்டுள்ளது. இந்த அரங்கில் தினகரன் நாளிதழில் இருந்து வெளியிடப்படும் குங்குமம், தோழி, டாக்டர், தினகரன் ஆன்மிகம், விவசாயம், கிச்சன் ஆகிய இதழ்கள் உள்ளன.
The post 47வது சென்னை புத்தக காட்சி: மழை பெய்தாலும் புத்தகம் வாங்க வாசகர்கள் ஆர்வம் appeared first on Dinakaran.