வேலைவாய்ப்பிலும் பெண்களை முன்னிலைப்படுத்துவதில் தமிழ்நாடு முன்னணி மாநிலமாக திகழ்கிறது: முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பேச்சு!


சென்னை: உலக முதலீடுகள் மழையாக பொழியும் என்று நம்பிக்கை வந்துள்ளது என உலக முதலீட்டாளர்கள் மாநாட்டில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் உரையாற்றினார். உலக முதலீட்டாளர்கள் மாநாட்டில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கூறியதாவது; கல்விக்கு முக்கியத்துவம் அளிக்கும் மாநிலமாக தமிழகம் இருந்து வருகிறது. உலக முதலீட்டாளர்கள் மாநாட்டில் இதுவரை ரூ.36000 கோடி முதலீடு செய்ய புரிந்துணர்வு ஒப்பந்தங்கள் கையெழுத்தாகின. ஒரு லட்சம் கோடி டாலர் பொருளாதாரத்துக்கான தொலைநோக்கு திட்ட அறிக்கையை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வெளியிட்டார். டாடா நிறுவனம் ரூ.12,800 கோடி முதலீடு செய்ய ஒப்பந்தம் கையெழுத்து. செல்போன் உதிரிபாக தொழிற்சாலையை விரிவுபடுத்த புரிந்துணர்வு ஒப்பந்தம் கையெழுத்தானது. ரூ.1000 கோடியில் பெகட்ரான் ஆலை விரிவாக்கத்துக்கு ஒப்பந்தம் கையெழுத்து.

செல்போன் அல்லாத பிற மின் சாதன உற்பத்தியை தொடங்குகிறது பெகட்ரான். ரூ.1000 கோடியில் பெகட்ரான் ஆலை விரிவாக்கம் மூலம் 8000 பேருக்கு வேலை வாய்ப்பு கிடைக்க உள்ளது. ரூ.10,000 கோடி முதலீடு செய்கிறது ஜே.எஸ்.டபிள்யூ. எனர்ஜி நிறுவனம். டி.வி.எஸ். நிறுவன ஆலையை விரிவுபடுத்துவதற்காக ரூ.5,000 கோடி முதலீட்டுக்கு ஒப்பந்தம் கையெழுத்து. டி.வி.எஸ். நிறுவன ஆலையை விரிவுபடுத்துவதன் மூலம் 500 பேருக்கு வாய்ப்பு கிடைக்க உள்ளது. மிட்சுபிஷி தொழிற்சாலையை ரூ.250 கோடியில் விரிவாக்கம் செய்ய ஒப்பந்தம். சிங்கப்பூர் மேயர்ஸ்க் நிறுவனம் தமிழ்நாடு அரசு இடையே புரிந்துணர்வு ஒப்பந்தம் கையெழுத்து. ஹைட்ரஜன், மின்சாரத்தில் இயங்கும் வாகனங்களை தயாரிக்க ஹுண்டாய் ரூ.6,180 கோடி முதலீடு செய்கிறது.

சென்னையில் இன்று காலை முதல் மழை பெய்வதுபோல் முதலீட்டாளர்கள் மாநாட்டிலும் முதலீடு மழையாக பெய்யும் என நம்புகிறேன். அனைத்து வகை தொழில்களிலும் முன்னேறும் மாநிலமாக தமிழ்நாடு உள்ளது. இந்தியாவுக்கு தமிழ்நாடு பல்வேறு விதங்களில் முன் மாதிரி மாநிலமாக உள்ளது. திறமையான தொழிலாளர்கள் இருப்பதால் உலக முதலீட்டாளர்கள் தமிழ்நாட்டுக்கு வருகிறார்கள். கல்விக்கு முக்கியத்துவம் தரும் மாநிலமாக தமிழ்நாடு இருப்பதால் சிறந்த தொழிலாளர்கள் அதிகம் உள்ளனர். வங்கித் துறை பணியாளராக வாழ்க்கையை தொடங்கி நிதி மற்றும் வர்த்தகத்துறை அமைச்சராக பல்வேறு பணிகளை ஆற்றியவர் பியூஷ் கோயல். அமெரிக்கா, இங்கிலாந்து, சிங்கப்பூர் உள்ளிட்ட 9 நாடுகள் தமிழ்நாடு அரசுடன் பங்குதாரர்களாக இணைந்துள்ளனர்.

கூடுதல் முதலீடுகளை ஈர்ப்பதன் மூலம் இந்த மாநாடு தொழில் வளர்ச்சிக்கு வழி வகுக்கும். தொழில் வளர்ச்சிக்கு முதலீட்டாளர்கள் மாநாடு வழிவகுக்கும். முதலீட்டாளர்கள் மாநாட்டில் பங்கேற்றுள்ள நிறுவனங்களுக்கும் இந்த மாநாடு பயனுள்ளதாக அமையும். அனைவரையும் உள்ளடக்கிய வளர்ச்சி என்ற கருத்தோட்டத்தில் இந்த மாநாடு நடத்தப்படுகிறது. இந்தியாவுக்கு தமிழ்நாடு பல்வேறு விதங்களில் முன் மாதிரி மாநிலமாக உள்ளது. கூடுதல் முதலீடுகளை ஈர்ப்பதன் மூலம் இந்த மாநாடு தொழில் வளர்ச்சிக்கு வழி வகுக்கும். துறை வாரியாக மேற்கொண்ட முதலீட்டாளர்கள் சந்திப்புக்கு நல்ல வரவேற்பு கிடைத்துள்ளது. தொழில்துறை வரலாற்றில் ஒரு மகத்தான அத்தியாயமாக உலக முதலீட்டாளர்கள் மாநாடு அமையும். இந்தியாவின் வளர்ச்சியில் தமிழ்நாடு முக்கிய பங்காற்ற வேண்டும் என்ற எண்ணத்தோடுதான் ஒரு லட்சம் கோடி டாலர் பொருளாதாரம் என்ற இலக்கு.

உயர்தொழில்நுட்பம் கொண்ட தொழில்களை ஈர்ப்பது, அதிக வேலை வாய்ப்புகளை கொண்ட தொழில்களை ஈர்ப்பது என்ற இரு முக்கிய. முதலீட்டாளர்கள் என்ன எதிர்பார்க்கிறார்கள் என்பதை முன்கூட்டியே உணர்ந்து தமிழ்நாடு அரசு செயல்பட்டு வருகிறது. ஒரு மாநிலத்தில் தொழில் தொடங்க வேண்டும் என்றால் சட்டம் – ஒழுங்கு சிறப்பாக இருக்க வேண்டும், ஆட்சி தலைவர்கள் மீது ஒரு மரியாதை இருக்க வேண்டும். தேவையான உட்கட்டமைப்பு வசதி சிறப்பானதாக இருக்க வேண்டும். கடந்த இரண்டரை ஆண்டுகளில் 200-க்கும் மேற்பட்ட புரிந்துணர்வு ஒப்பந்தங்களை தமிழ்நாடு அரசு மேற்கொண்டுள்ளது.

தொழில்துறையின் ஒவ்வொரு பிரிவுக்கும் தேவயைான தனித்தனி கொள்கைகளை உருவாக்கி உள்ளது தமிழ்நாடு அரசு. கல்வியிலும், வேலைவாய்ப்பிலும் பெண்களை முன்னிலைப்படுத்துவதில் தமிழ்நாடு முன்னணி மாநிலமாக திகழ்கிறது. 18-க்கும் மேற்பட்ட தொழிற்கொள்கைகளை வெளியிட்டுள்ளது திமுக அரசு. தமிழ்நாடு முழுவதும் பரவலான, சீரான வளர்ச்சியை ஏற்படுத்த வேண்டும் என்பதே எங்களது இலட்சியம் என்று கூறியுள்ளார்.

 

The post வேலைவாய்ப்பிலும் பெண்களை முன்னிலைப்படுத்துவதில் தமிழ்நாடு முன்னணி மாநிலமாக திகழ்கிறது: முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பேச்சு! appeared first on Dinakaran.

Related Stories: