பொதுமக்கள் குறைகளை நிவர்த்தி செய்ய அரசு அதிகாரிகள் ஏ.ஐ. தொழில்நுட்பத்தை பயன்படுத்த ஆலோசனை

புதுடெல்லி: பொதுமக்களின் குறைகளை தீர்ப்பதில் அரசு அதிகாரிகள், பல்வேறு சேவை துறைகளின் நிபுணர்கள் செயற்கை நுண்ணறிவை பயன்படுத்துவது குறித்த ஆலோசனை கூட்டம் நடைபெற்றது. டெல்லியில், ஒன்றிய பணியாளர்கள் நலத்துறையின் கீழ் செயல்படும் நிர்வாக சீர்திருத்தம் மற்றும் பொதுமக்கள் குறைதீர்ப்பு துறையின் சார்பில், வளர்ந்து வரும் மற்றும் எதிர்கால இ-ஆளுமை முயற்சிகள், இ-வர்த்தக முயற்சிகள் மற்றும் வளர்ந்து வரும் தொழில்நுட்பங்கள் குறித்த கருத்தரங்கு நேற்று நடந்தது. இதில் டிலாய்ட், கேபிஎம்ஜி, ப்ரைமஸ் பார்ட்னர்ஸ், இஒய் உள்ளிட்ட பல்வேறு நிறுவனங்களை சேர்ந்த 15-க்கும் மேற்பட்ட நிபுணர்கள் பங்கேற்றனர்.

இது தொடர்பாக ஒன்றிய பணியாளர் நலத்துறை அமைச்சகம் வெளியிட்ட அறிக்கையில், ‘இந்த கூட்டத்தில், இ-சேவை டெலிவரி, இ-ஆளுமை மற்றும் புதிய தொழில்நுட்பங்களை அமல்படுத்துவது குறித்து கலந்து ஆலோசிக்கப்பட்டது. மேலும், மாநில அரசுகள் டெலிவரி சேவையை எப்படி ஒருமுகப்படுத்திய சேவை தளமாக மாற்றி, ஒரே இடத்தில் அனைத்து விதமான டெலிவரி சேவைகளை பெறுவதை 100 சதவீதம் சாத்தியமாக்கி உள்ளன என்பது குறித்து விவரிக்கப்பட்டது. அரசு துறைகளின் அதிகாரிகள், பல்வேறு சேவை துறைகளை சேர்ந்த நிபுணர்களுக்கு பொதுமக்களின் புகார் மற்றும் குறைகளை தீர்ப்பதில் செயற்கை தொழில்நுட்பத்தின் மூலம் தீர்வு காண பயிற்சி அளிப்பது குறித்து ஆலோசிக்கப்பட்டது,’ என்று கூறப்பட்டுள்ளது.

The post பொதுமக்கள் குறைகளை நிவர்த்தி செய்ய அரசு அதிகாரிகள் ஏ.ஐ. தொழில்நுட்பத்தை பயன்படுத்த ஆலோசனை appeared first on Dinakaran.

Related Stories: