காவல் நிலையத்தில் கையெழுத்து போட்டுவிட்டு துணைவேந்தர் பணியை ஜெகநாதன் தொடர சேலம் பெரியார் பல்கலை. பேராசிரியர்கள் எதிர்ப்பு..!!

சேலம்: காவல் நிலையத்தில் கையெழுத்து போட்டுவிட்டு துணைவேந்தர் பணியை ஜெகநாதன் தொடர சேலம் பெரியார் பல்கலை. பேராசிரியர்கள் எதிர்ப்பு தெரிவித்துள்ளனர். பல்கலை.யில் பணியாற்றிக் கொண்டே பூட்டர் என்ற கல்வி நிறுவனத்தை துணைவேந்தர் ஜெகநாதன், அவரது கூட்டாளிகள் தொடங்கியதாக புகார் எழுந்தது. இந்த வழக்கில் கைது செய்யப்பட்ட துணைவேந்தர் ஜெகநாதன், மாஜிஸ்ட்ரேட் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டு தற்போது நிபந்தனை ஜாமினில் வெளியில் உள்ளார். 7 நாட்கள் நிபந்தனை ஜாமினில் வெளியே வந்த ஜெகநாதன், கடந்த 27-ம் தேதி காவல் நிலையத்தில் கையெழுத்திட்டார். பின்னர் ஆஞ்சியோகிராம் செய்துகொண்டு தனியார் மருத்துவமனையில் தங்கிய நிலையில், நேற்று முன்தினம் வீடு திரும்பினார்.

நேற்றும் இன்றும் துணைவேந்தர் ஜெகநாதன் சூரமங்கலம் காவல் நிலையத்தில் கையெழுத்திட்டார். காவல் நிலையத்தில் கையெழுத்து போட்டுவிட்டு பல்கலைக்கழகத்தில் உள்ள தனது அறையில் அன்றாட பணிகளை ஜெகநாதன் கவனித்து வருகிறார். இந்நிலையில், குற்ற வழக்கில் கைதான ஜெகநாதன், துணைவேந்தர் பணியை தொடர்வதற்கு சேலம் பெரியார் பல்கலைக்கழக பேராசிரியர்கள் கடும் எதிர்ப்பு தெரிவித்துள்ளனர். காவல் நிலையத்தில் கையெழுத்து போட்டுவிட்டு துணைவேந்தர் பணியை ஜெகநாதன் தொடர பல்கலை. பேராசிரியர்கள் எதிர்ப்பு தெரிவித்த்திருக்கின்றனர்.

The post காவல் நிலையத்தில் கையெழுத்து போட்டுவிட்டு துணைவேந்தர் பணியை ஜெகநாதன் தொடர சேலம் பெரியார் பல்கலை. பேராசிரியர்கள் எதிர்ப்பு..!! appeared first on Dinakaran.

Related Stories: