உலக முதலீட்டாளர்கள் மாநாடு ஏற்பாடுகள் தொடர்பாக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் ஆலோசனை..!!

சென்னை: உலக முதலீட்டாளர்கள் மாநாடு ஏற்பாடுகள் தொடர்பாக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் ஆலோசனை நடத்தி வருகிறார். தமிழ்நாடு அரசானது உலக முதலீட்டாளர்கள் மாநாட்டை ஜன.7, 8-ம் தேதிகளில் சென்னை நந்தம்பாக்கத்தில் உள்ள வர்த்தக மையத்தில் நடத்தவுள்ளது. 2 நாள் நடைபெறும் உலக முதலீட்டாளர்கள் மாநாட்டில், உலகில் உள்ள பல்வேறு நாடுகளை சேர்ந்த தொழில் நிறுவனங்கள் கலந்துக்கொள்ள உள்ளன. தொழில் நிறுவனங்களிடம் இருந்து பல்வேறு முதலீடுகளை ஈர்க்கும் வகையில் பல்வேறு முயற்சி நடைபெறவுள்ளது. உலக முதலீட்டாளர்கள் மாநாடு நடைபெற இன்னும் 2 நாட்களே உள்ள நிலையில், தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் இது தொடர்பான ஆலோசனையில் ஈடுபட்டு வருகிறார்.

சென்னை தலைமைச் செயலகத்தில் நடைபெற்று வரும் இந்த ஆலோசனை கூட்டத்தில் அமைச்சர்கள் துரைமுருகன், எ.வ.வேலு, டி.ஆர்.பி.ராஜா, உதயநிதி ஸ்டாலின், அரசு அதிகாரிகள் உள்ளிட்டோர் பங்கேற்றுள்ளனர். மேலும், தலைமைச் செயலாளர் சிவ்தாஸ் மீனா, தொழில் துறை செயலாளர் அருண் ராய் உள்ளிட்டோரும் கூட்டத்தில் பங்கெடுத்துள்ளனர். இந்த ஆலோசனை கூட்டத்தில் உலக முதலீட்டாளர்கள் மாநாட்டிற்கான பணிகள் எந்தளவில் நிறைவடைந்துள்ளது. எந்தெந்த நிறுவனங்கள் மாநாட்டில் கலந்துகொள்ளவுள்ளன. அவர்களிடம் இருந்து எவ்வளவு ரூபாய்க்கு முதலீடு பெறப்படவுள்ளது. எத்தனை புரிந்துணர்வு ஒப்பந்தங்கள் கையெழுத்திடப்படவுள்ளது. அதற்கான பணிகள் எவ்விதத்தில் உள்ளது என்பது தொடர்பாக விரிவான ஆலோசனை நடைபெற்று வருகிறது.

The post உலக முதலீட்டாளர்கள் மாநாடு ஏற்பாடுகள் தொடர்பாக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் ஆலோசனை..!! appeared first on Dinakaran.

Related Stories: