காட்டெருமையை கொன்றதால் விவசாயிகளுக்கு சம்மன்: அண்ணாமலை புது விளக்கம்

சேலம்: சேலம் மாவட்டத்தில் நடைபயணத்தை பாஜ மாநில தலைவர் அண்ணாமலை நேற்று தொடங்கினார். பின்னர் அவர் நிருபர்களிடம் கூறியதாவது: சேலம் பெரியார் பல்கலைகழக துணைவேந்தர் கைது என்பது தமிழகத்தில் உள்ள ஒவ்வொரு தமிழனும் தலை குனிந்து நிற்கும் அளவிற்கு நிகழ்ந்துள்ளது. பெரியார் பல்கலைக்கழகத்தில் படிக்கும் மாணவ, மாணவிகளுக்கு திறமையை வளர்க்கும் விதமாக அந்த தனியார் நிறுவனம் ஆரம்பிக்கப்பட்டுள்ளது. இதில் என்ன தவறு உள்ளது. இந்தியா முழுவதும் உள்ள பல்கலைகழகத்தில் இதுபோன்ற நிறுவனங்கள் உள்ளது. துணைவேந்தர் மீது வன்கொடுமை வழக்கு வேண்டுமென்றே போடப்பட்டுள்ளது. பெரியார் பல்கலைக்கழக துணை வேந்தர் மீது எடுக்கப்பட்ட நடவடிக்கை குறித்து உள்துறை அமைச்சர் அமித்ஷாவுக்கு கடிதம் அனுப்பி உள்ளோம்.

சேலம் ஆத்தூரில் இரண்டு விவசாயிகளுக்கு அமலாக்கத்துறை சார்பாக சம்மன் அனுப்பிய விவகாரத்தில், எங்கள் கட்சி மாவட்ட செயலாளருக்கு எந்த பங்கும் இல்லை. காட்டெருமை ஒன்றை கொலை செய்த வழக்கு விவசாயிகள் மீது உள்ளது. இதனால் வங்கி கணக்கை கொடுங்கள், சோதனை செய்ய வேண்டும் என்றுதான் கேட்கிறார்கள். இவ்வாறு அண்ணாமலை கூறினார்.

The post காட்டெருமையை கொன்றதால் விவசாயிகளுக்கு சம்மன்: அண்ணாமலை புது விளக்கம் appeared first on Dinakaran.

Related Stories: