திமுக செயற்குழு கூட்டம்

 

சிவகங்கை, ஜன.3: திருப்புவனத்தில் திமுக மேற்கு ஒன்றிய, நகர செயற்குழு கூட்டம் நடைபெற்றது. அவைத் தலைவர் இளங்கோவன் தலைமை வகித்தார். ஒன்றிய செயலாளர் வசந்தி சேங்கைமாறன் முன்னிலை வகித்தார். தீர்மானங்களை விளக்கி மாவட்ட துணை செயலாளர் சேங்கைமாறன் பேசினார். தமிழர் திருநாளை முன்னிட்டு நகர் மற்றும் ஒன்றிய பகுதிகளில் திமுக கொடி ஏற்றுவது, விளையாட்டு போட்டிகள் நடத்துவது மற்றும் பொதுமக்களுக்கு இனிப்பு வழங்குவது.

புதிய வாக்காளர் சேர்த்தல் நீக்கல் பணியில் கழக நிர்வாகிகள் தீவிரமாக ஈடுபட வேண்டும் என்பது உள்ளிட்ட தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டது. இக்கூட்டத்தில் மாவட்ட பிரதிநிதிகள் ஈஸ்வரன், வெங்கடேசன், அக்னிராஜ், பாலகிருஷ்ணன், மாவட்ட இளைஞரணி துணை அமைப்பாளர் பொற்கோ, மாவட்ட விவசாய அணி துணை அமைப்பாளர் சேகர், ஒன்றிய நிர்வாகிகள் ரவி, சுப்பிரமணியன், மகேந்திரன், ராமு, பேரூராட்சி துணைத் தலைவர் ரகமத்துல்லாகான், மீனவரணி அண்ணாமலை, விவசாய அணி சங்கர், ஆதிதிராவிடர் அணி ரவிச்சந்திரன் மற்றும் கிளை, வட்டக் நிர்வாகிகள் உள்ளாட்சிப் பிரதிநிதிகள் கலந்து கொண்டனர்.

The post திமுக செயற்குழு கூட்டம் appeared first on Dinakaran.

Related Stories: