தென்கொரியாவில் எதிர்கட்சி தலைவருக்கு கத்திக்குத்து

சியோல்: தென் கொரியாவில் எதிர்க்கட்சியான ஜனநாயக கட்சி தலைவர் லீ ஜே மியூங்(59). இவர் நேற்று பூசன் நகரில் உள்ள புதிய விமான நிலையத்தை பார்ப்பதற்காக சென்றுள்ளார். அங்கு பத்திரிக்கையாளர்கள், கட்சி தொண்டர்கள், பொதுமக்கள் என திரண்டு இருந்தனர். கூட்டத்தில் லீ நடந்து சென்றபோது ஒருவர், லீயின் ஆட்டோகிராப் வேண்டும் என்று கூறி அருகில் வந்த நபர் திடீரென லீயின் கழுத்தில் கத்தியால் குத்தினான். அலறி துடித்த அவர் ரத்த வெள்ளத்தில் சரிந்து விழுந்தார். லீ அவசர சிகிச்சைக்கு பின் அறுவை சிகிச்சைக்காக விமானம் மூலமாக சியோல் அழைத்து செல்லப்பட்டார். தாக்குதல் நடத்திய 61 வயது நபரை கட்சி நிர்வாகிகள் மடக்கி பிடித்தனர்.

The post தென்கொரியாவில் எதிர்கட்சி தலைவருக்கு கத்திக்குத்து appeared first on Dinakaran.

Related Stories: