டிரோன்கள் மூலம் ரஷ்யா தாக்குதல் உக்ரைன் பதிலடியில் 5 பேர் பரிதாப பலி

கீவ்: புத்தாண்டின் அதிகாலையில் உக்ரைனின் பல நகரங்களின் மீது ரஷ்யா டிரோன்களை ஏவி தாக்குதல் நடத்தியதில் சிறுவன் உயிரிழந்தான். இதற்கு பதிலடியாக உக்ரைன் நடத்திய தாக்குதலில், 5 பேர் பலியாயினர். ரஷ்யாவுக்கும் உக்ரைனுக்கும் இடையேயான போர் விரைவில் இரண்டாவது ஆண்டை நெருங்கும் நிலையில் உள்ளது. கடந்த 26ம் தேதி உக்ரைன் மீது ரஷ்யா 122 ஏவுகணைகள் மற்றும் 36 ஏவுகணைகளை வீசி தாக்குதல் நடத்தியது.இதில்,49 பேர் பலியாகினர். ஏராளமானோர் படுகாயமடைந்தனர்.

அதை தொடர்ந்து ரஷ்யாவின் பெல்கோராட் நகர் மீது உக்ரைன் ராணுவம் குண்டுகளை வீசி தாக்கியது. இதில், 21 பேர் பலியாகினர். இந்நிலையில், புத்தாண்டு துவங்கிய நிலையில் நேற்று அதிகாலையில், இருந்து உக்ரைன் நகரங்களில் ஷாகேத் வகை டிரோன்களை வீசி ரஷ்யா தாக்குதல் நடத்தியது. 90க்கும் மேற்பட்ட டிரோன்கள் ஏவியதில் குடியிருப்பு கட்டிடம் இடிந்து விழுந்து 15 வயது சிறுவன் பலியானான்.

இடிபாடுகளில் சிக்கி பலர் காயமடைந்தனர் என ஒடேசா பகுதிக்கான ராணுவ நிர்வாகி தெரிவித்தார். இதற்கு பதிலடியாக ரஷ்ய ஆக்கிரமிப்பில் உள்ள டொனட்ஸ்க் மாகாணத்தில் உள்ள பகுதிகள் மீது உக்ரைன் ராணுவம் குண்டுகளை வீசியதில் 4 பேர் உயிரிழந்தனர். ஒருவர் படுகாயமடைந்தார். மேலும் எல்லையில் உள்ள ரஷ்ய நகரமான ஷெபேகினோ மீது உக்ரைன் குண்டுவீசியதில் ஒருவர் பலியானார். இன்னொருவர் படுகாயமடைந்தார் என மாகாண ஆளுநர் கிளாட்கோ தெரிவித்தார்.

The post டிரோன்கள் மூலம் ரஷ்யா தாக்குதல் உக்ரைன் பதிலடியில் 5 பேர் பரிதாப பலி appeared first on Dinakaran.

Related Stories: