விருதுநகரில் மாநில அளவிலான ஹாக்கி போட்டிகள் துவங்கின

 

விருதுநகர், ஜன. 1: விருதுநகரில் மாநில அளவிலான ஹாக்கி போட்டிகள் நேற்று துவங்கின. மாநில அளவிலான ஹாக்கி போட்டிகள் விருதுநகர் கே.வி.எஸ்.ஆண்கள் மேல்நிலைப்பள்ளியில் நேற்று துவங்கி மொத்தம் 3 நாட்கள் நடைபெறுகிறது. இதில், சென்னை, விழுப்புரம், கடலூர், திருவண்ணாமலை, கோவில்பட்டி, திண்டுக்கல்,மதுரை,விருதுநகர் ஓசூர் ,காரைக்குடி, வாடிப்பட்டி கோவில்பட்டி,அருப்புக்கோட்டை சிவகாசி,ராஜபாளையம் ஆகிய ஊர்களில் இருந்து 27 அணிகள் பங்கேற்கின்றன.

போட்டியை கே.வி.எஸ்.மேனஜிங் ஃபோர்டு தலைவர் கே.எம்.ஆர் கார்த்திகேயன் துவக்கி வைத்தார். நேற்று நடைபெற்ற முதல் சுற்றுப் போட்டிகளில் நெய்வேலி அணி விழுப்புரம் சங்தகீதமங்கலம் அணியை 2-1 என்ற புள்ளிகள் கணக்கிலும்,திருவண்ணாமலை தண்ட்ராம்பட் அணி கல்லூரணி டவுண் அணியை 4-0 என்ற புள்ளிகள் கணக்கிலும், அழகப்பா உடற்கல்வி கல்லூரி அணி யாழினி அணியை 2-1 என்ற புள்ளிகள் கணக்கிலும்,

அதியமான் பொறியியல் கல்லூரி அணி கோவில்பட்டி டாக்டர் அம்பேத்கர் அணியை 6-0 என்ற புள்ளிகள் கணக்கிலும், திண்டுக்கல் ஜிடிஎன் கல்லூரி அணி – அருப்புக்கோட்டை அணியை 2-1 என்ற புள்ளிகள் கணக்கிலும், காரைக்குடி தயாள் அணி கடலூர் அணியை 2-1 என்ற புள்ளிகள் கணக்கிலும் வென்றன. நாளை இறுதிப் போட்டி நடைபெறுகிறது. இதில் வெற்றி பெறும் அணி வீரர்களுக்கு சுழற் கோப்பை மற்றும் ரொக்கப்பரிசுகள் வழங்கப்படும்.

The post விருதுநகரில் மாநில அளவிலான ஹாக்கி போட்டிகள் துவங்கின appeared first on Dinakaran.

Related Stories: