முதல் டெஸ்டில் விளையாடியபோது தென் ஆப்ரிக்க வேகப் பந்துவீச்சாளர் ஜெரால்டு கோட்ஸீ இடுப்புப் பகுதியில் ஏற்பட்ட காயம் காரணமாக அவதிப்பட்டார். வலியை பொறுத்துக்கொண்டு 3வது நாள் ஆட்டத்திலும் அவர் பந்துவீசினார். போட்டி முடிந்த பின்னர் கோட்ஸீக்கு ஸ்கேன் பரிசோதனை செய்யப்பட்டதில் காயத்தின் பாதிப்பு தீவிரமாக இருப்பது தெரியவந்தது. இதைத் தொடர்ந்து, முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக 2வது டெஸ்டில் அவர் விளையாட மாட்டார் என தென் ஆப்ரிக்க அணி பயிற்சியாளர் ஷுக்ரி கான்ராட் தெரிவித்துள்ளார். எனினும், கோட்ஸீக்கு பதிலாக மாற்று வீரர் யாரும் தேர்வு செய்யப்படவில்லை.
The post இந்தியாவுடன் 2வது டெஸ்ட் காயத்தால் விலகினார் கோட்ஸீ appeared first on Dinakaran.