மத்திய காசாவில் 2 அகதிகள் முகாமில் இஸ்ரேல் குண்டுவீச்சு

டெய்ர் அல் பலாப்: மத்திய காசாவில் மேலும் 2 அகதிகள் முகாம் மீது இஸ்ரேல் வான்வழி தாக்குதல் நடத்தியது. காசாவில் ஹமாஸ் படையினரை குறிவைத்து இஸ்ரேல் ராணுவம் 2 மாதத்திற்கும் மேலாக போர் புரிந்து வருகிறது. வடக்கு காசாவை முற்றிலும் நாசமாக்கிய நிலையில், தெற்கு காசாவில் இஸ்ரேல் படையினர் தொடர்ந்து முன்னேறி வருகின்றனர். இதற்கிடையே, மத்திய காசாவில் நுசைரத் மற்றும் புரைஜ் ஆகிய 2 அகதிகள் முகாம் மீது இஸ்ரேல் ராணுவம் நேற்றும், நேற்று முன்தினமும் வான்வழி தாக்குதல் நடத்தியது. இதில், 11 அப்பாவி பொதுமக்கள் பலியாகி உள்ளனர். ஹமாஸ் படையினர் பாலஸ்தீன மக்களோடு மக்களாக ஆழமாக வேரூன்றி இருப்பதால் பல இலக்குகள் குறிவைக்கப்படுவதை தவிர்க்க முடியவில்லை என இஸ்ரேல் ராணுவம் கூறி உள்ளது.

அதோடு கான்யூனிஸ் நகரில் ஹமாசின் உளவுத்துறை தலைமையகத்தை முற்றுகையிட்டுள்ள இஸ்ரேல் ராணுவம் அங்கு சோதனை நடத்தி முக்கிய ஆதாரங்களை கைப்பற்றி இருப்பதாக கூறி உள்ளது. தற்போதைய நிலையில் போரை நிறுத்துவது ஹமாசின் வெற்றியாக அமையும் என்பதால் அவர்களை வேரோடு முற்றிலும் அழிக்கும் வரை போரை நிறுத்தப்போவதில்லை என இஸ்ரேல் அரசு கூறி உள்ளது.இதற்கிடையே, ரபா பகுதியில் மேலும் மேலும் மக்கள் ஒரே இடத்தில் குவிவதால் அங்கு தங்குமிடம், உணவு, குடிநீர் தட்டுப்பாடு கடுமையாகி உள்ளது. இந்தநிலையில், இந்த மாதத்தில் 2வது முறையாக நாடாளுமன்றத்தின் அனுமதியின்றி இஸ்ரேலுக்கு ரூ.1,220 கோடிக்கு ஆயுத விற்பனை மேற்கொள்ள அமெரிக்க அதிபர் பைடன் நிர்வாகம் அனுமதி வழங்கி உள்ளது.

The post மத்திய காசாவில் 2 அகதிகள் முகாமில் இஸ்ரேல் குண்டுவீச்சு appeared first on Dinakaran.

Related Stories: