தேனி சாலையோரங்களில் வைகை அணை நீர் தேக்கம்

தேனி: வைகை அணையில் நீர் நிரம்பியுள்ளதையடுத்து, அணையின் நீர்ப்பிடிப்பு பகுதியான தேனி அருகே குன்னூர் பகுதியில் சாலை வரை நீர் தேங்கியுள்ளது. தேனியில் இருந்து சுமார் 16 கிமீ தொலைவில் வைகை அணை உள்ளது. வைகை அணைக்கு வருசநாடு பகுதியில் இருந்து மூலவைகையாறு, கொட்டக்குடி ஆறு, சுருளியாறு, முல்லைப்பெரியாறுகளில் இருந்து நீர் வருகிறது. தேனி மாவட்டத்தில் கடந்த வாரம் பெய்த கனமழையின் காரணமாக அணைக்கு நீர்வரத்து அதிகரித்தது. இதன்படி, தற்போது அணையின் உயரமான 71 அடி உயரத்திற்கு நீர்மட்டம் உயரும் நிலையில் உள்ளது.

இதன்காரணமாக தேனி அருகே குன்னூர் வைகையாற்றில் தண்ணீர் செல்லாமல் வைகை அணையின் நீர்ப்பிடிப்பு பகுதியாக மாறி தண்ணீர் தேங்கி நிற்கிறது. இதேபோல அரப்படித் தேவன்பட்டி பகுதியிலும் சாலையோரம் உள்ள விவசாய நிலங்களை மூழ்கடித்து தேனியில் இருந்து மதுரை செல்லும் தேசிய நெடுஞ்சாலை வரை வைகை அணை நீர்ப்பிடிப்பு பகுதி தண்ணீர் தேங்கி எங்குபார்த்தாலும் தண்ணீராக சிறுகடலை பார்ப்பதுபோன்ற தோற்றத்தை உருவாக்கி உள்ளது. இச்சாலை வழியாக பேருந்துகளிலும், கார்களிலும், வேன்களிலும் பயணிப்போர் இந்த ரம்மியமான சூழ்நிலையை பார்த்து ரசித்தபடி செல்கின்றனர்.

The post தேனி சாலையோரங்களில் வைகை அணை நீர் தேக்கம் appeared first on Dinakaran.

Related Stories: