108 ஆம்புலன்சில் மருத்துவ உதவியாளர் பணி வாய்ப்பு

நாமக்கல், டிச.30: நாமக்கல் மோகனூர் ரோட்டில் உள்ள பழைய அரசு மருத்துவமனை வளாகத்தில், 108 ஆம்புலன்ஸில் மருத்துவ உதவியாளர் பணிக்கான நேரடி வேலை வாய்ப்பு முகாம், இன்று (30ம் தேதி) காலை 10 மணிக்கு நடக்கிறது. மருத்துவ உதவியாளராக பணியாற்ற அடிப்படை தகுதிகள்: பிஎஸ்சி நர்சிங் அல்லது ஜிஎன்எம், ஏஎன்எம், டிஎம்எல்டி (12ம் வகுப்பிற்கு பிறகு 2ஆண்டுகள் படித்திருக்க வேண்டும்) அல்லது லைஃப் சயின்ஸ், பிஎஸ்சி, ஜூவாலஜி, பாட்டனி, பயோ கெமிஸ்ட்ரி, மைக்ரோபயாலஜி, பயோடெக்னாலஜி, இவைகளில் ஏதேனும் ஒரு பட்டப்படிப்பு முடித்திருக்க வேண்டும். வயது வரம்பு தேர்வு அன்று 19வயதுக்கு குறையாமலும், 30 வயதுக்கு மிகாமலும் இருக்க வேண்டும். எழுத்துத் தேர்வு: மருத்துவ நேர்முகம் உடற்கூறியில், முதலுதவி, அடிப்படை செவிலியர் பணி தொடர்பான மற்றும் மனிதவளத்துறை நேர்முகத் தேர்வுகள் நடைபெறும். முகாமில் தேர்வு செய்யப்படுபவர்கள், 50 நாட்கள் முழுமையான வகுப்பறை பயிற்சி அளிக்கப்பட்டு, பின்னர் பணியில் அமர்த்தப்படுவார்கள். மேலும் விவரங்கள் அறிய 044-28888060, 75,77, 9154251323 எண்களை தொடர்பு கொள்ளலாம். இவ்வாறு 108 ஆம்புலன்ஸ் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறப்பட்டுள்ளது.

The post 108 ஆம்புலன்சில் மருத்துவ உதவியாளர் பணி வாய்ப்பு appeared first on Dinakaran.

Related Stories: