ஒன்றிய அமைச்சர் நிர்மலா சீதாராமன், நடிகர்கள் ரஜினிகாந்த், கமல்ஹாசன், விஜய் உள்ளிட்டோர் விஜயகாந்த் உடலுக்கு நேரில் அஞ்சலி செலுத்தி பிரேமலதா, மகன்கள் ஆகியோரிடம் ஆறுதல் கூறினர். இதைத் தொடர்ந்து விஜயகாந்த் அவர்களின் உடல் முழு அரசு மரியாதையுடன் இன்று மாலை நல்லடக்கம் செய்யப்படுகிறது.
இந்த நிலையில் விஜயகாந்த் மறைவு குறித்து கேள்விப்பட்டவுடன் அஜித் தொலைபேசியில் பிரேமலதா விஜயகாந்த் அவர்களை தொடர்பு கொண்டு தான் துபாயில் இருப்பதால் நேரில் இறுதி சடங்கில் பங்கேற்க முடியவில்லை என்று வேதனையுடன் தெரிவித்தார். மேலும் விஜயகாந்த் மறைவுக்கு தனது ஆழ்ந்த இரங்கலை தெரிவித்துக் கொள்வதாக அஜித் கூறியதோடு பிரேமலதா மற்றும் சுதீஷுக்கு ஆறுதல் கூறியதாகவும் தகவல்கள் வெளியாகி உள்ளன.
The post தேமுதிக தலைவர் விஜயகாந்த் மறைவுக்கு நடிகர் அஜித் இரங்கல் : தொலைபேசியில் பிரேமலதாவுக்கு ஆறுதல்..! appeared first on Dinakaran.