ஜன.4ம் தேதி ராமேஸ்வரம் ராமநாதசுவாமி கோயிலில் காலை 7 மணி முதல் 12 மணி வரை நடை அடைப்பு

ராமேஸ்வரம்: அஷ்டமி பூப்பிரக்ஷிண படிபோடுதல் விழாவையொட்டி ஜன.4ம் தேதி ராமேஸ்வரம் ராமநாதசுவாமி கோயில் நடை அடைக்கப்பட்டிருக்கும் என் தெரிவிக்கப்பட்டுள்ளது. இது தொடர்பாக கோவில் நிர்வாகம் வெளியிட்டுள்ள அறிக்கையில்; சுபஸ்ரீ சோபகிருது வருடம் 04.01.2024 மார்கழி மாதம் 19ம் தேதி வியாழக்கிழமை படிபோடுதல், அஷ்டமி பூப்பிரதக்ஷிணம் பஞ்சமூர்த்திகள் எழுந்தருளல். காலை 3.00 மணிக்கு திருக்கோயில் நடைதிறந்து 3.30 மணி முதல் 4.00 மணி வரை ஸ்படிகலிங்க பூஜை நடைபெறும்.

தொடர்ந்து பூஜா காலங்கள் நடைபெற்று காலை 7.00 மணிக்கு பஞ்சமூர்த்திகள் எழுந்தருளல். காலை 7.00 மணிமுதல் பகல் 12.00 மணிவரை திருக்கோயில் நடைசாத்தப்பட்டிருக்கும். பகல் 12.00 மணிக்கு திருக்கோயில் நடை திறந்து சுவாமி திருக்கோயிலுக்கு திரும்பியதும் உச்சிகால பூஜை நடைபெறும் என்று கோவில் நிர்வாகம் தெரிவித்துள்ளது.

The post ஜன.4ம் தேதி ராமேஸ்வரம் ராமநாதசுவாமி கோயிலில் காலை 7 மணி முதல் 12 மணி வரை நடை அடைப்பு appeared first on Dinakaran.

Related Stories: