கேல் ரத்னா மற்றும் அர்ஜுனா விருதுகளை திருப்பி அளிப்பதாக மல்யுத்த வீராங்கனை வினேஷ் போகத் அறிவிப்பு

டெல்லி: கேல் ரத்னா மற்றும் அர்ஜுனா விருதுகளை திருப்பி அளிப்பதாக மல்யுத்த வீராங்கனை வினேஷ் போகத் அறிவித்துள்ளார். இந்திய மல்யுத்த கூட்டமைப்பின் தலைவராக இருந்த பாஜ எம்பி பிரிஜ்பூஷண் சரண்சிங் மீது ஒரு சிறுமி உட்பட 7 வீராங்கனைகள் பாலியல் புகார் அளித்தனர். பல்வேறு போராட்டங்கள், வழக்கு காரணமாக அவர் மீது புகார் பதிவு செய்யப்பட்டது.

அதனால் பிரிஜ்பூஷண் பதவி விலகினார். தொடர்ந்து நடக்கும் தேர்தலில் அவரது ஆதரவாளர்கள் போட்டியிடக் கூடாது என்று போர்க்கொடி தூக்கிய மல்யுத்த வீராங்கனைகள், அது குறித்து ஒன்றிய விளையாட்டுத் துறை அமைச்சர் அனுராக் தாகூரை நேரில் சந்தித்தும் வலியுறுத்தினர். இந்த நிலையில், நேற்று முன்தினம் நடந்த தேர்தலில் பிரிஜ்பூஷணின் விசுவாசியான சஞ்ஜெய் சிங் தலைராக தேர்வானார். மேலும் 4 துணைத் தலைவர்கள், 5 செயற்குழு உறுப்பினர்கள், பொருளாளர் என 15 பதவிகளில் பெரும்பான்மையான பதவிகளை பிரிஜ்பூஷண் ஆதரவாளர்களே கைப்பற்றினர்.

இந்த தேர்தல் முடிவால் மல்யுத்த வீரர், வீராங்கனைகள் அதிர்ச்சி அடைந்தனர். ‘பிரிஜ் பூஷணின் நெருங்கிய உதவியாளரும், வணிகப் பங்குதாரருமான சஞ்ஜெய் சிங் தலைவராக தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளதால், குற்றச்சாட்டுக்கு ஆளானவரே கூட்டமைப்பில் மீண்டும் ஆதிக்கம் செலுத்தும் நிலைமை ஏற்பட்டுள்ளது.

கேல் ரத்னா மற்றும் அர்ஜுனா விருதுகளை திருப்பி அளிப்பதாக மல்யுத்த வீராங்கனை வினேஷ் போகத் அறிவித்துள்ளார். இது தொடர்பாக பிரதமர் மோடிக்கு மல்யுத்த வீராங்கனை வினேஷ் போகத் எழுதியுள்ள கடிதத்தில்; ஒலிம்பிக் போட்டியில் பதக்கம் வெல்ல வேண்டும் என்ற கனவு கலைந்து வருகிறது. ஒவ்வொரு பெண்ணும் கண்ணியத்துடன் வாழ்க்கையை வாழ விரும்புவர். நாட்டிற்காக பதக்கம் வென்ற வீரர், வீராங்கனைகள் இதையெல்லாம் செய்யவேண்டுமா.

உங்கள் வீட்டின் மகள் என்ன நிலையில் இருக்கிறாள் என்பதற்கே இந்த கடிதம் எழுதியுள்ளேன். ஒன்றிய அரசு வழங்கிய விருதுகளை திருப்பி அளிப்பதாக மல்யுத்த மல்யுத்த போட்டிகளில் இருந்து விலகுவதாக சாக்ஷி மாலிக் ஏற்கனவே அறிவித்திருந்தார்வீராங்கனை சாக்ஷி மாலிக் மல்யுத்த போட்டிகளில் இருந்து விலகுவதாக அறிவித்ததை அடுத்து அவருக்கு வீரர்கள் ஆதரவுவீரர்கள் அடுத்தடுத்து கூறியிருந்தனர். பத்மஸ்ரீ விருதை திரும்ப வழங்குவதாக மல்யுத்த வீரர் பஜ்ரங் புனியா ஏற்கனவே அறிவித்திருந்தார்.

The post கேல் ரத்னா மற்றும் அர்ஜுனா விருதுகளை திருப்பி அளிப்பதாக மல்யுத்த வீராங்கனை வினேஷ் போகத் அறிவிப்பு appeared first on Dinakaran.

Related Stories: