சந்திரபாபு நாயுடுவுக்கு இப்போதே தோல்வி பயம்: ஆந்திர அமைச்சர்கள் கிண்டல்

திருமலை: சந்திரபாபு நாயுடுவுக்கு இப்போதே தோல்வி பயம் வந்துவிட்டதாக ஆந்திர அமைச்சர்கள் கூறினர். ஆந்திராவில் இன்னும் சில மாதங்களில் நாடாளுமன்ற தேர்தலுடன் சட்டப்பேரவைக்கான தேர்தல் நடைபெற உள்ளது. மாநிலத்தில் கடந்த தேர்தலின்போது ஜெகன்மோகனின் ஒய்.எஸ்.ஆர். காங்கிரஸ் கட்சியின் அமோக வெற்றிக்கு தேர்தல் வியூக நிபுணர் பிரசாந்த் கிஷோர் முக்கிய பங்கு வகித்தார். இந்நிலையில் நேற்று சந்திரபாபுவுடன் பிரசாந்த்கிஷோர் சந்தித்து பேசியுள்ளார்.

தெலுங்குதேச கட்சியின் தேர்தல் வியூக நிபுணராக தற்போதுவரை ராபின்சர்மா என்பவரது குழு செயல்பட்டு வருகிறது. பிரசாந்த்கிஷோருடன், ராபின்சர்மாவின் குழுவும் இணைந்து சந்திரபாபுவின் வீட்டில் சுமார் 2 மணி நேரத்திற்கு மேலாக ஆலோசனை நடத்தியதாக கூறப்படுகிறது.

இதுகுறித்து ஆந்திர மாநில அமைச்சர்கள் அம்பட்டி ராம்பாபு, குடிவாடா அமர்நாத் ஆகியோர் கூறுகையில், ‘சந்திரபாபுவுக்கு இப்போதே தோல்வி பயம் வந்துவிட்டது. இதனால் ஏற்கனவே ஒரு ஐபேக் நிறுவனம் உள்ள நிலையில் கூடுதலாக பிரசாந்த் கிஷோரின் ஐபேக் நிறுவனத்தை நாடி உள்ளார். கடந்த தேர்தலின்போது பிரசாந்த் கிஷோர்-ஜெகன்மோகன் ஐபேக் கூட்டணி அமைத்ததை சந்திரபாபு கடுமையாக விமர்சித்து வந்தார். ஆனால் தற்போது அவருக்கு தோல்வி பயம் அதிகரித்துவிட்டதால் பிரசாந்த்கிஷோரை அழைத்து பேசி உள்ளார். வரும் தேர்தலில் அவர் தோல்வியடைந்தால், அவரது கட்சி காணாமல் போய்விடும் என்பதால் இந்த சந்திப்பு நடந்துள்ளது. இவ்வாறு அவர்கள் கூறினர்.

The post சந்திரபாபு நாயுடுவுக்கு இப்போதே தோல்வி பயம்: ஆந்திர அமைச்சர்கள் கிண்டல் appeared first on Dinakaran.

Related Stories: