காஸ் நுகர்வோர் குறைதீர் கூட்டம்

நாமக்கல், டிச.24: நாமக்கல் மாவட்டத்தில் சமையல் காஸ் நுகர்வோர் நலன் கருதி, அனைத்து எண்ணெய் மற்றும் சமையல் காஸ் நிறுவன மேலாளர்கள், காஸ் விநியோகஸ்தர்கள், ஏஜெண்டுகள், காஸ் நுகர்வோர் மற்றும் தன்னார்வலர்கள் ஆகியோர்களுடன், சமையல் காஸ் நுகர்வோர் குறைதீர் கூட்டம் வரும் 27ம் தேதி மாலை 4 மணிக்கு, கலெக்டர் அலுவலகத்தில் நடைபெற உள்ளது. மாவட்ட வருவாய் அலுவலர் சுமன் தலைமை வகிக்கிறார். சமையல் காஸ் விநியோகம் தொடர்பான குறைபாடுகள் மற்றும் கோரிக்கைகளை தெரிவிக்க விரும்பும் நுகர்வோர்கள், இந்த கூட்டத்தில் கலந்து கொண்டு, சமையல் காஸ் விநியோகம் மற்றும் குறைபாடுகள் குறித்த கோரிக்கை மனுக்களை அளித்து தீர்வு பெறலாம் என கலெக்டர் உமா தெரிவித்துள்ளார்.

The post காஸ் நுகர்வோர் குறைதீர் கூட்டம் appeared first on Dinakaran.

Related Stories: