கொழிஞ்சாம்பாறை அரசு கலை கல்லூரியில் தானியப்பயிர் விவசாயம் செய்து கல்லூரி மாணவர்கள் அசத்தல்

பாலக்காடு : பாலக்காடு மாவட்டம் கொழிஞ்சாம்பாறை அரசுக் கலை அறிவியல் கல்லூரி வளாகத்தில் விவசாயத்திற்கு உகந்த நிலப்பரப்பு அமைந்துள்ளாதல் விவசாய உற்பத்தி பெருக்க வேண்டும். மக்களிடையே விழிப்புணர்வு ஏற்படுத்த வேண்டும் என்கிற நோக்கத்தில் தமிழ்த்துறை மாணவர்கள் தானியப்பயிர் விவசாயம் செய்துள்ளனர். மாணவ, மாணவியர்கள் அமைத்துள்ள தானியப்பண்ணை, மலர்த்தோட்டம், கைவினைப்பொருட்கள் ஆகியவை தமிழர்களின் பாரம்பரிய தொழிற்திறன்களை மீட்டெடுக்கும் முயற்சியாக அமைந்துள்ளது.

இந்நிலையில் வறட்சியைத் தாங்கி வளரும் நமது பாரம்பரியத் தானிய வகைகளைத் தக்க வைக்கும் நோக்கில் தமிழ்த்துறை மாணவர்கள் தானிய நாற்று பண்ணை மற்றும் விவசாயம் அமைத்திருக்கின்றனர். சோளம், கம்பு, ராகி, தினை, சாமை, மக்காச்சோளம், தட்டைப்பயிறு, பச்சைப்பயிறு, கொண்டைக்கடலை, சோம்பு, சீரகம், கடுகு, சூரியகாந்தி, பருத்தி, வெந்தயம், கீரைவகைகள் என்று தானியப்பண்ணையில் பலவிதப்பயிர்களும் செழித்து வளர்ந்து நிற்கின்றன. இவ்வகை வேளாண்ப்பயிர்கள் குறித்து அறியாத பிறதுறை மாணவர்களும், பேராசிரியர்களும், பொதுமக்களும் இவர்களது சாதனைப்படைப்பை வியர்ந்துப் பார்த்துச் செல்கின்றனர்.

The post கொழிஞ்சாம்பாறை அரசு கலை கல்லூரியில் தானியப்பயிர் விவசாயம் செய்து கல்லூரி மாணவர்கள் அசத்தல் appeared first on Dinakaran.

Related Stories: