நிலக்கோட்டை பேரூராட்சியில் மாதாந்திர கவுன்சிலர் கூட்டம்: சிறப்பு மருத்துவ முகாம்கள் நடத்த முடிவு

 

நிலக்கோட்டை, டிச. 22: நிலக்கோட்டை பேரூராட்சியில் மாதாந்திர கவுன்சிலர் கூட்டம் நேற்று நடைபெற்றது. தலைவர் சுபாஷினி பிரியா கதிரேசன் தலைமை வகித்தார். செயல் அலுவலர் பூங்கொடி முருகு முன்னிலை வகித்தார். துணைத் தலைவர் முருகேசன் வரவேற்றார் கூட்டத்தில் மாவட்டத்தில் மிக வேகமாக வளர்ந்து வரும் பேரூராட்சிகளில் ஒன்றாக நிலக்கோட்டை பேரூராட்சி இருப்பதால் அதிகரித்து வரும் திடக்கழிவு மேலாண்மை பயன்பாட்டிற்காக புதிய மினி லாரி வாங்கவும், சுகாதாரத்திற்கு முக்கியத்துவம் அளிக்கும் வகையில் மருந்து தெளிக்கும் இயந்திரங்கள் வாங்கவும், மழைக்காலத்தில் ஏற்படும் தொற்று நோய்களை கட்டுப்படுத்தும் வகையில் சிறப்பு மருத்துவ முகாம்கள் நடத்தவும் முடிவு செய்யப்பட்டது. இதில் கவுன்சிலரும், நகர செயலாளருமான ஜோசப் கோவில்பிள்ளை, கவுன்சிலர்கள் செந்தில், சிலம்பு செல்வம், முத்து உள்பட பலர் கலந்து கொண்டனர். தலைமை நிலைய கணக்கர் மேகநாதன் நன்றி கூறினார்.

The post நிலக்கோட்டை பேரூராட்சியில் மாதாந்திர கவுன்சிலர் கூட்டம்: சிறப்பு மருத்துவ முகாம்கள் நடத்த முடிவு appeared first on Dinakaran.

Related Stories: