சனிப்பெயர்ச்சி விழா

காவேரிப்பட்டணம், டிச.21: காவேரிப்பட்டணம் ஜலகண்டேஸ்வரர் கோயிலில், நேற்று சனிப்பெயர்ச்சி விழா நடைபெற்றது. மாலை 3.30 மணி அளவில், சனி பகவான் மகர ராசியில் இருந்து கும்ப ராசிக்கு மாறுவதால் விசேஷ பூஜைகள் நடத்தப்பட்டன. இந்நிகழ்ச்சி முன்னாள் அறங்காவலர் குமாரதேவன் தலைமையில் நடந்தது. நவ கிரகங்கள் சன்னதி முன்பு மகாகணபதி ஹோமம், நவகிரக ஹோமம், சிறப்பு சனிப்பெயர்ச்சி ஹோமம் நடைபெற்றது. இதில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு வழிபட்டனர்.

The post சனிப்பெயர்ச்சி விழா appeared first on Dinakaran.

Related Stories: