கேரளாவில் கொரோனா பாதிப்பு தமிழ்நாட்டில் அறிகுறி உள்ளவர்களுக்கு பரிசோதனை: பொது சுகாதாரத்துறை அறிவுறுத்தல்

சென்னை; சமீப நாட்களில் இந்தோனேசியா, தாய்லாந்து மற்றும் கேரளாவில் கொரொனா பாதிப்பு அதிகரித்து வருவதையொட்டி தமிழகத்தில் அறிகுறி உள்ளவர்களுக்கு பரிசோதனை செய்ய பொது சுகாதாரத்துறை அறிவுறுத்தியுள்ளது. பொது சுகாதாரத்துறை அனைத்து துணை இயக்குநர்களுக்கு அனுப்பிய சுற்றறிக்கை:

கடந்த 13ம் தேதி ஒன்றிய சுகாதாரம் மற்றும் குடும்ப நல அமைச்சகத்தின் சுகாதார சேவைகள் ஆலோசனை கூட்டம் இயக்குநர் ஜெனரல் தலைமையில் காணொலி காட்சி மூலம் நடத்தப்பட்டது, மேலும் கொரொனா பாதிப்பை கண்காணிக்க, பரிசோதனை வசதிகளை தயார்நிலை இருப்பதை உறுதி செய்ய சுகாதாரப் பணிகள் துணை இயக்குநர்களுக்கும் அறிவுறுத்தினார்.

அறிகுறி உள்ளவர்களுக்கு பரிசோதனை செய்ய வேண்டும், கை கழுவுதல், முக கவசம் அணிதல் குறித்து பொதுமக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்த வேண்டும். கூட்ட நெரிசலான இடங்களைத் தவிர்க்க வேண்டும். நோயெதிர்ப்பு குறைபாடுள்ளவர்கள் மற்றும் தொற்றாத நோய்க்கான சிகிச்சையில் உள்ளவர்கள், கர்ப்பிணி கள் பொது இடங்களில் முக கவசம் அணிய அறிவுறுத்தப்பட வேண்டும்.

The post கேரளாவில் கொரோனா பாதிப்பு தமிழ்நாட்டில் அறிகுறி உள்ளவர்களுக்கு பரிசோதனை: பொது சுகாதாரத்துறை அறிவுறுத்தல் appeared first on Dinakaran.

Related Stories: