குன்னம் அருகே சு.ஆடுதுறை சிவன் கோயில் பாலாலயம்

குன்னம், டிச.16: பெரம்பலூர் மாவட்டம் குன்னம் வட்டம் சுகந்த குந்தலாம்பிகை உடனுறை குற்றம் பொறுத்தவர் கோயில் திருப்பணி பாலாலயம் நடைபெற்றது. சு.ஆடுதுறை கிராமத்தில் அமைந்துள்ளது சுகந்தகுந்தலாம்பிகை உடனுறை குற்றம் பொறுத்தவர் (அபராதரட்சகர்) இத்திருக்கோயில் மாவட்டத்தில் பிரசித்தி பெற்ற ஆயிரம் ஆண்டுகள் பழமை வாய்ந்த கோயில். கோயிலில் திருப்பணி நடைபெறுவதற்கு தமிழக முதல்வர் அறிவிப்பின்படி ரூ.1 கோடி 30 லட்சம் மதிப்பீட்டில் அரசு நிதியுடன் திருப்பணி பாலாலயம் பூஜை நேற்று முன்தினம் கணபதி ஹோமம் பூஜைகளுடன் தொடங்கியது.

தொடர்ந்து முதல் காலயாக வேள்வி, கலாகர்ஷனம் மற்றும் யாகசாலை பிரவேச பூஜைகள் நடைபெற்றது. இதனையடுத்து நேற்று இரண்டாம் கால பூஜையும், தொடர்ந்து பாலாலய சிறப்பு பூஜைகள் நடைபெற்றது. நிகழ்ச்சியில் மாவட்ட அறங்காவலர் குழு தலைவர் ஆ.கலியபெருமாள் உறுப்பினர் சண்முகம், வேப்பூர் வடக்கு ஒன்றிய இளைஞரணி துணை அமைப்பாளர் கவியரசன் கிளை கழக நிர்வாகிகள் சுப்பிரமணியன், ஜெயராமன், முருகன், உள்ளாட்சி பிரதிநிதிகள், அறநிலையத்துறை அலுவலர்கள், பக்தர்கள் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.

The post குன்னம் அருகே சு.ஆடுதுறை சிவன் கோயில் பாலாலயம் appeared first on Dinakaran.

Related Stories: