வகுப்புவாதிகளை இன்றளவும் அச்சுறுத்தும் பெரியாரின் பெயரை எங்கும் எப்போதும் பயன்படுத்துவோம்: மு.க.ஸ்டாலின் டிவிட்

சென்னை: முதல்வர் மு.க.ஸ்டாலின் டிவிட்டர் பதிவில் கூறியிருப்பதாவது: மாநிலங்களவையில் திமுக எம்.பி எம்.எம்.அப்துல்லா உரையாற்றும்போது சுட்டிக்காட்டிய பெரியாரின் மேற்கோளுக்கு பாஜவினர் எதிர்ப்பு தெரிவித்துள்ளனர். பெரியாரின் பெயரும் அவைக்குறிப்பிலிருந்து நீக்கப்பட்டுள்ளது. நாடாளுமன்றத்திலேயே கருத்துரிமையின் கழுத்து நெரிக்கப்பட்டுள்ளது. மண்டல் ஆணையப் பரிந்துரையை அமல்படுத்தியபோது பெரியார் தான் இதற்குக் காரணம் என்று பிரதமர் வி.பி.சிங் பேசிய நாடாளுமன்றத்தில் பெரியார் பெயர் நீக்கப்பட்டுள்ளது அவமானம். மக்களின் மனங்களில் நிலைத்து நின்று, வகுப்புவாதிகளை இன்றளவும் அச்சுறுத்தும் பெரியாரின் பெயரை எங்கும் எப்போதும் எந்த சூழலிலும் பயன்படுத்துவோம், அனைவரும் பயன்படுத்துங்கள். இவ்வாறு முதல்வர் மு.க.ஸ்டாலின் கூறியுள்ளார்.

The post வகுப்புவாதிகளை இன்றளவும் அச்சுறுத்தும் பெரியாரின் பெயரை எங்கும் எப்போதும் பயன்படுத்துவோம்: மு.க.ஸ்டாலின் டிவிட் appeared first on Dinakaran.

Related Stories: