×

தகராறில் காயமடைந்து மீண்டவர் திடீர் சாவு

சேலம், டிச.9: சேலம் தாதகாப்பட்டி அம்மாள் ஏரி ரோடு பகுதியை சேர்ந்தவர் மாதேஸ்வரன் (55), கூலி தொழிலாளி. கடந்த 26ம் தேதி மாதேஸ்வரன் மற்றும் சிலருக்கு இடையே தகராறு ஏற்பட்டுள்ளது. இந்த தகராறில் மாதேஸ்வரன் காயம் அடைந்தார். இதையடுத்து அவர் சிகிச்சைக்காக சேலம் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். 4 நாட்களுக்கு பின்னர் அவர் சிகிச்சை முடிந்து வீடு திரும்பினார். இந்நிலையில் நேற்று காலை மாதேஸ்வரனுக்கு திடீரென நெஞ்சு வலி ஏற்பட்டது. அவரை உறவினர்கள் சேலம் அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். ஆனால் வழியிலேயே மாதேஸ்வரன் உயிரிழந்தார். இதுகுறித்து அன்னதானப்பட்டி போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

The post தகராறில் காயமடைந்து மீண்டவர் திடீர் சாவு appeared first on Dinakaran.

Tags : Salem ,Matheswaran ,Dadagapatti Ammal Lake Road ,Dinakaran ,
× RELATED சேலம் அருகே மீண்டும் சிறுத்தை அட்டகாசம்