இதன் காரணமாக சென்னை, திருவள்ளூர், செங்கல்பட்டு, காஞ்சிபுரம் மாவட்டங்களில் ஐந்தாவது நாள்களாக பள்ளிகள், கல்லூரிகளுக்கு விடுமுறை விடப்பட்டுள்ளது. பள்ளிகள் திறப்பதற்கு முன்பாக உரிய ஏற்பாடுகளை செய்ய பள்ளிக்கல்வித்துறை நேற்று நான்கு மாவட்ட தலைமை ஆசிரியர்களுக்கு உத்தரவிட்டது. இந்நிலையில், சேதமடைந்த பள்ளிகளை சீரமைக்க பள்ளிக்கல்வித்துறை நிதி ஒதுக்கீடு செய்துள்ளது. அதன்படி 4 மாவட்டங்களில் பாதிக்கப்பட்ட பள்ளிகளை சீரமைக்க ரூ.1 கோடி ஒதுக்கீடு செய்துள்ளது. இதில் சென்னை, செங்கல்பட்டு, காஞ்சிபுரம், திருவள்ளுர் மாவட்டங்களுக்கு தலா ரூ.25 லட்சம் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளதாக பள்ளிக்கல்வித்துறை தெரிவித்துள்ளது.
The post சென்னை உள்ளிட்ட 4 மாவட்டங்களில் அரசு பள்ளிகளை சீரமைக்க ரூ.1கோடி ஒதுக்கீடு: பள்ளிக்கல்வித் துறை அறிவிப்பு appeared first on Dinakaran.
