சேலத்தில் நடைபெற இருந்த திமுக இளைஞரணி மாநாடு டிச.24ம் தேதிக்கு தள்ளிவைப்பு!

சேலம்: சேலத்தில் டிச.17ம் தேதி நடைபெற இருந்த திமுக இளைஞரணியின் 2வது மாநில மாநாடு, டிச.24ம் தேதி நடைபெறும் என அறிவிப்பு வெளியாகி உள்ளது. மிக்ஜாம் புயல், வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட பகுதிகளில் நிவாரண பணிகள் நடைபெற்று வருவதால், மாநாடு தேதி மாற்றம் என திமுக தலைமை தெரிவித்துள்ளது. சென்னையில் மிக்ஜாம் புயல் மற்றும் வரலாறு காணாத இடைவிடாமல் பெய்த கன மழையினால் பெரும் பாதிப்பு ஏற்பட்டுள்ளது. ஆயிரக்கணக்கான மரங்கள், முறிந்து விழுந்துள்ளன.

மின்கம்பங்கள் சாய்ந்துள்ளன. சாலைகளில் வெள்ளநீர் தேங்கியுள்ளது. உயிரிழப்பும் ஏற்பட்டுள்ளது. மாநகராட்சி ஊழியர்களும், தூய்மைப் பணியாளர்களும், தேசிய பேரிடர் மீட்பு படையினரும் மீட்பு பணிகளில் ஈடுபட்டு வருகின்றனர். கனமழை, வெள்ளத்தால் இதுவரை 10க்கும் மேற்பட்டோர் உயிரிழந்துள்ளனர். கோடிக்கனக்கான பொது சொத்துக்கள் மற்றும் பொருட்கள் சேதமடைந்துள்ளன. இந்நிலையில், மிக்ஜாம் புயலால் ஏற்பட்ட பாதிப்புகளால் தொடர்ந்து நிவாரண பணிகள் நடைபெற்று வருவதால் திமுக இளைஞர் அணி சார்பில் வருகிற 17ம் தேதி சேலத்தில் நடைபெற இருந்த 2வது மாநில மாநாட்டின் தேதி மாற்றப்பட்டுள்ளது.

இது தொடர்பாக திமுக தலைமை கழகம் வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில், தி.மு.க. இளைஞர் அணி இரண்டாவது மாநில மாநாடு தேதி மாற்றம் செய்யப்பட்டுள்ளது. 2023 டிசம்பர் 24 ஞாயிறு அன்று நடைபெறும். மிக்ஜாம்” புயலால் பெய்த பெருமழை – வெள்ளம் காரணமாக, சில மாவட்டங்கள் பெரும் பாதிப்புக்குள்ளாகி, மழை – வெள்ள நிவாரணப் பணிகள் நடைபெற்று வருவதால், வருகிற 17-12-2023 அன்று சேலத்தில் நடைபெறுவதாக அறிவிக்கப்பட்ட “தி.மு.க. இளைஞர் அணி இரண்டாவது மாநில மாநாடு” தேதி மாற்றப்பட்டு, வருகிற 24-12-2023 (ஞாயிற்றுக்கிழமை) அன்று நடைபெறும் என்று குறிப்பிடப்பட்டுள்ளது.

The post சேலத்தில் நடைபெற இருந்த திமுக இளைஞரணி மாநாடு டிச.24ம் தேதிக்கு தள்ளிவைப்பு! appeared first on Dinakaran.

Related Stories: