அடுக்குமாடி குடியிருப்புவாசிகள் அவதி; மின் இணைப்பு உடனே வழங்க வேண்டும்: எடப்பாடி வலியுறுத்தல்

சென்னை: அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி நேற்று வெளியிட்டுள்ள அறிக்கை:
அம்பத்தூர் தொழிற்பேட்டை மற்றும் பாடி, கொரட்டூர், முகப்பேர் ஆகிய இடங்களில் உள்ள சிறு, குறு மற்றும் நடுத்தர தொழிற்சாலைகளுக்குள் மழை வெள்ளம் புகுந்து இயந்திரங்கள் இயங்க முடியாத நிலையில் உள்ளதாகவும், வெள்ள நீரை அகற்றி, மீண்டும் தொழிற்சாலைகள் முழுமையாக இயங்குவதற்கு குறைந்தபட்சம் ஒரு மாதம ஆகும் என்று தொழிற்கூட்டமைப்பினர் தெரிவிக்கின்றனர்.

எனவே, அரசு தொழிற்பேட்டைகளில் தேங்கியுள்ள வெள்ள நீரை உடனடியாக அப்புறப்படுத்துவதோடு, அவர்களுக்கு நிவாரணம் வழங்கவும், மின்கட்டண சலுகை அளிக்கவும் வலியுறுத்துகிறேன். மின் இணைப்பு இல்லாததால் அடுக்குமாடி குடியிருப்புகள் மற்றும் வீடுகளில் உள்ள பொதுமக்கள் கடும் சிரமத்திற்குள்ளாகி உள்ளனர். அதனால் உடனடியாக மின் இணைப்பு வழங்க வேண்டும்.

The post அடுக்குமாடி குடியிருப்புவாசிகள் அவதி; மின் இணைப்பு உடனே வழங்க வேண்டும்: எடப்பாடி வலியுறுத்தல் appeared first on Dinakaran.

Related Stories: