4 மாநில தேர்தல் முடிவுகள் காங்கிரசின் ஈகோவுக்கு முற்றுப்புள்ளி: அகிலேஷ் யாதவ் சாடல்

லக்னோ: உத்தரபிரதேச முன்னாள் முதல்வரும், சமாஜ்வாதி கட்சித் தலைவருமான அகிலேஷ் யாதவ், தனியார் சேனலுக்கு அளித்த பேட்டியில், ‘பாஜகவை எதிர்கொள்ள வேண்டுமானால், பெரிய அளவில் முன்னேற்பாடுகளைச் செய்ய வேண்டும். எதிர்க்கட்சிகளிடையே நேர்மை தேவை. பெரும்பான்மை பலத்தை பெறுவதற்கான அனைத்து வழிகளையும் கண்டறிய வேண்டும். அப்படி செய்தால் மட்டுமே லோக்சபா தேர்தலில் வித்தியாசமான தேர்தல் முடிவை எதிர்பார்க்க முடியும். மூன்று மாநில தேர்தல் முடிவுகள் காங்கிரஸின் ஈகோவுக்கு முற்றுப்புள்ளி வைத்துள்ளது. பாஜகவுக்கு எதிரான போராட்டத்தை சாதாரணமாக எடுத்துக் கொள்ள வேண்டாம். அது மிகவும் பெரியது.

உத்தரபிரதேசத்தில் சமாஜ்வாதி கட்சி பெரும் சவாலை எதிர்கொள்கிறது. பாஜகவுக்கு எதிரான போராட்டத்தை கடுமையாக்கி வருகிறோம். அதற்காக சில முக்கிய முடிவுகளை எடுக்க உள்ளோம். வரும் லோக்சபா தேர்தலில், அதனை வெளிப்படுத்துவோம். தற்போதைய 5 மாநில தேர்தல் முடிவுகளால் ஏமாற்றம் அடைய வேண்டியதில்லை. அரசியலிலும் ஜனநாயகத்திலும் இதுபோன்ற ேதால்விகள் சகஜம். பாஜகவுக்கு எதிராக வலுவாக நிற்க வேண்டுமானால், சரியான திட்டமிடல் வேண்டும். நேர்மறையான நடவடிக்கை மூலம்தான் அதனை செயல்படுத்த முடியும்’ என்றார்.

The post 4 மாநில தேர்தல் முடிவுகள் காங்கிரசின் ஈகோவுக்கு முற்றுப்புள்ளி: அகிலேஷ் யாதவ் சாடல் appeared first on Dinakaran.

Related Stories: