இணையசேவை பாதிப்பு; மெட்ரோ ரயில் டிக்கெட் ஆன்லைனில் பெற முடியாது: மெட்ரோ நிர்வாகம்

சென்னை: இணையசேவை பாதிப்பால் மெட்ரோ ரயில் டிக்கெட் ஆன்லைனில் பெற முடியாது என மெட்ரோ நிர்வாகம் தெரிவித்துள்ளது. வங்கக்கடலில் உருவான மிக்ஜாம் புயல் காரணமாக சென்னையில் மழை கொட்டி தீர்த்தது. தொடர்ந்து 12 மணி நேரத்திற்கும் மேலாக பெய்த தொடர்மழையால் சென்னை வெள்ளக்காடாக மாறியது. புறநகர் மாவட்டங்களான திருவள்ளூர், காஞ்சிபுரம், செங்கல்பட்டு ஆகியவையும் மிதக்கத் தொடங்கன. பேருந்து, ரயில் போக்குவரத்து முதல் விமானப் போக்குவரத்து வரை அனைத்தும் பாதிக்கப்பட்டது.

பல்வேறு சாலைகள் போக்குவரத்து செல்ல முடியாமல் துண்டிக்கப்பட்டன. பல்வேறு பகுதிகளில் குடியிருப்புகளை வெள்ளம் சூழ்ந்தது. மேலும் கனமழையின் காரணமாக மின் இணைப்பு, இணையசேவை முற்றிலுமாக துண்டிக்கப்பட்டது. மெட்ரோ ரயில்கள் மட்டும் இயக்கப்படுகிறது. வழக்கமான காலை 5 மணி முதல் இரவு 11 மணி வரை இயக்கப்படும் என மெட்ரோ நிர்வாகம் தெரிவித்துள்ளது.

இந்நிலையில் இணையசேவை பாதிப்பால் மெட்ரோ ரயில் டிக்கெட் ஆன்லைனில் பெற முடியாது என மெட்ரோ நிர்வாகம் தெரிவித்தது. ஆன்லைன் மூலம் டிக்கெட் வழங்க முடியாத நிலை உள்ளது. மெட்ரோ ரயில் ஸ்மார்ட் கார்டு வைத்துள்ளவர்கள் அதை வைத்து வழக்கம்போல பயணம் செய்யலாம். பயணிகள் பாதிக்கக்கூடாது என்பதற்காக கவுண்டரில் டோக்கன் வினியோகம் செய்யப்படும் என்றும் தெரிவித்துள்ளது.

The post இணையசேவை பாதிப்பு; மெட்ரோ ரயில் டிக்கெட் ஆன்லைனில் பெற முடியாது: மெட்ரோ நிர்வாகம் appeared first on Dinakaran.

Related Stories: