மிக்ஜாம் புயல்: அதிகனமழை காரணமாக ஓடுதளத்தில் மழை நீர் சூழ்ந்ததால் 2 மணி நேரம் விமான நிலையம் மூடல்

சென்னை: மிக்ஜாம் புயல் காரணமாக சென்னை மற்றும் புறநகர் பகுதியில் அதிகனமழை பெய்து வருகிறது. சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் மழைநீர் தேங்கியுள்ளது. அதே போல் சென்னை விமான நிலைய வளாகம் மற்றும் ஓடு பாதைகளில் மழைநீர் தேங்கியுள்ளது. இதன் காரணமாக காலை 9.40 முதல் 11.40 வரை 2 மணி நேரம் மூடப்படுவதாக தெரிவிக்கபட்டுள்ளது.

ஏற்கனவே இன்று காலை சுமார் 23 விமானங்கள் ரத்து செய்யபட்டது. இதில் சென்னை விமான நிலையத்தில் இருந்து புறப்பட வேண்டிய விமானங்கள் 11மற்றும் வருகை விமானங்கள் 12 ரத்து செய்யபட்ட நிலையில் மொத்தமாக 65 விமான சேவைகள் பாதிக்கபட்டது. இதனை அடுத்து சூறாவளி காற்றுடன் அதீத மழை பெய்து வருவதால் விமான ஓடுதளத்தில் தண்ணீர் தேங்கியுள்ளது. இதன் காரணமாக 2 மணி நேரத்திற்கு சென்னை விமான நிலையம் தற்காலிகமாக மூடபட்டுள்ளது.

இதனால் சென்னை விமான நிலையத்துக்கு வரவேண்டிய உள்ளூர் விமானம் மற்றும் சர்வதேச விமானம் என அனைத்து விமனங்களும் பெங்களூரு, கொச்சி, ஐதராபாத் விமானநிலையங்களுக்கு திருப்பி விடபட்டுள்ளது.

The post மிக்ஜாம் புயல்: அதிகனமழை காரணமாக ஓடுதளத்தில் மழை நீர் சூழ்ந்ததால் 2 மணி நேரம் விமான நிலையம் மூடல் appeared first on Dinakaran.

Related Stories: