அசல்களை வீழ்த்திய அதிருப்தி வேட்பாளர்கள்

ராஜஸ்தானில் பாஜ மட்டுமல்ல, அக்கட்சியின் அதிருப்தி வேட்பாளர்கள் சிலரும் இம்முறை அசத்தினர். முன்னாள் துணை பிரதமர் பைரோன் சிங் ஷெகாவத்தின் மருமகன் நர்பத் சிங் ராஜ்விக்கு சித்தோர்கர் தொகுதியை வழங்க அத்தொகுதியின் சிட்டிங் எம்எல்ஏவான சந்திரபன் ஆக்யாவுக்கு இம்முறை சீட் தரப்படவில்லை. இதனால் அதிருப்தி அடைந்த அவர் அதே தொகுதியில் சுயேச்சையாக போட்டியிட்டார்.

இந்நிலையில், நேற்றைய வாக்கு எண்ணிக்கையில் ஆக்யா வெற்றி பெற்று அசத்தினார். பாஜ வேட்பாளர் ராஜ்வி 3ம் இடத்திற்கு தள்ளப்பட்டார். இதே போல, சியோ, திட்வானா, பயானா ஆகிய தொகுதிகளில் சுயேச்சையாக போட்டியிட்ட பாஜ அதிருப்தி வேட்பாளர்கள் முறையே ரவீந்திர சிங் பாட்டி, முன்னாள் அமைச்சர் யூனுஸ் கான், ரிது பனாவத் ஆகியோர் பாஜ, காங்கிரஸ் வேட்பாளர்களை பின்னுக்கு தள்ளி வெற்றி பெற்று அசத்தினர்.

The post அசல்களை வீழ்த்திய அதிருப்தி வேட்பாளர்கள் appeared first on Dinakaran.

Related Stories: