காங். தனித்து போட்டியிட்டதே பாஜவின் வெற்றிக்கு காரணம்

கேரள முதல்வர் பினராய் விஜயன் பாலக்காட்டில் நேற்று நிகழ்ச்சி ஒன்றில் பேசுகையில், ‘‘மபி, ராஜஸ்தான், சட்டீஸ்கர் போன்ற இந்தி பேசும் மாநிலங்களில் பாஜவை போன்ற எதிரியை எதிர்கொள்ளும் போது, முடிந்தவரை மெகா கூட்டணியை அமைக்க வேண்டியது அவசியம். அதை செய்வதற்கு பதிலாக காங்கிரஸ் ஏற்கனவே வெற்றி பெற்று விட்டதாகவும், அது ஒரு பெரிய சக்தி என்றும், அதை யாராலும் தோற்கடிக்க முடியாது என்றும் நினைத்தது தவறு.

இந்த எண்ணம்தான் தற்போதைய வீழ்ச்சிக்கு வழிவகுத்தது. காங்கிரஸ் தலைவர் கமல்நாத் போன்றவர்கள் மதவாத செயல்களை எதிர்க்காமல், அதற்கு ஆதரவாக செயல்பட்டு பாஜவின் பி டீமாக இருந்தனர். மென்மையான இந்துத்துவா நிலைப்பாட்டின் மூலம் தீவிர இந்துத்துவாவை தோற்கடிக்க உதவும் என்று நினைப்பது ஒரு மாயை. காங்கிரசால் தனித்து நின்று பாஜவை வீழ்த்த முடியாது என்பதை தேர்தல் முடிவுகள் காட்டுகின்றன. இதில் இருந்து பாடம் கற்று தவறுகளை திருத்திக் கொள்ள வேண்டும்’’ என்றார்.

ஒன்றிய இணை அமைச்சர் முரளீதரன் கூறுகையில், ‘‘ராஜஸ்தான், மபி, சட்டீஸ்கரில் எதிர்க்கட்சிகளின் பொய் பிரசாரத்திற்கு பொதுமக்கள் தகுந்த பதில் அளித்துள்ளனர். இது ஆரம்பம் மட்டுமே. வரும் மக்களவை தேர்தலிலும் பாஜ வென்று பிரதமர் மோடி 3வது முறையாக பிரதமர் ஆவார்’’ என்றார்.

The post காங். தனித்து போட்டியிட்டதே பாஜவின் வெற்றிக்கு காரணம் appeared first on Dinakaran.

Related Stories: