பரங்கிமலை மெட்ரோ இரயில் நிலைய வாகன நிறுத்தும் இடம் தற்காலிகமாக மூடல்

சென்னை: தொடர் மழையின் காரணமாக பரங்கிமலை மெட்ரோ இரயில் நிலையத்தில் வாகன நிறுத்தும் பகுதியில் மழைநீர் அதிகமாக தேங்கி உள்ள காரணத்தினால் வாகன நிறுத்துமிடம் 05.12.2023 (செவ்வாய்க்கிழமை) காலை 10 மணி வரை தற்காலிகமாக மூடப்படுகிறது. பரங்கிமலை மெட்ரோ இரயில் நிலையத்தில் வாகனங்களை நிறுத்தியுள்ள உரிமையாளர்கள் தங்களது இருசக்கர மற்றும் நான்கு சக்கர வாகனங்களை உடனடியாக எடுத்து செல்லுமாறு சென்னை மெட்ரோ இரயில் நிர்வாகம் தெரிவித்துக்கொள்கிறது.

இந்த அறிவிப்பைத் தொடர்ந்து வாகன உரிமையாளர்கள் பரங்கிமலை மெட்ரோ இரயில் நிலையத்தில் இருந்து வாகனங்களை எடுத்து செல்லாத பட்சத்தில் வாகனத்திற்கு ஏதேனும் பாதிப்பு ஏற்பட்டால் சென்னை மெட்ரோ இரயில் நிர்வாகம் பொறுப்பேற்காது.

தற்போது பெய்து வரும் கனமழையின் காரணமாக பரங்கிமலை மெட்ரோ இரயில் நிலைய வாகன நிறுத்தும் பகுதியில் அதிகமாக மழைநீர் தேங்குவதற்கான வாய்ப்புகள் இருப்பதால் இந்த முன்னெச்சரிக்கை நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

மெட்ரோ பயணிகள் மற்றும் பொதுமக்கள் பரங்கிமலை மெட்ரோ இரயில் நிலையத்திற்கு அருகில் உள்ள அறிஞர் அண்ணா ஆலந்தூர் மெட்ரோ இரயில் நிலையம் மற்றும் நங்கநல்லூர் மெட்ரோ இரயில் நிலைய வாகன நிறுத்தும் இடத்தை பயன்படுத்திக் கொள்ளுமாறு கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள்.

The post பரங்கிமலை மெட்ரோ இரயில் நிலைய வாகன நிறுத்தும் இடம் தற்காலிகமாக மூடல் appeared first on Dinakaran.

Related Stories: