25வது ஆண்டாக சதர்ன் ரயில்வே மஸ்தூர் யூனியன் பொதுச்செயலாளராக என்.கண்ணையா தேர்வு: லோன் சொசைட்டி மேலாண்மை இயக்குநர் வாழ்த்து

திருச்சி: சதர்ன் ரயில்வே மஸ்தூர் யூனியன் பொதுச்செயலாளராக தொடர்ந்து 25வது ஆண்டாக தேர்வு செய்யப்பட்ட என்.கண்ணையாவுக்கு தெற்கு ரயில்வே லோன் சொசைட்டி மேலாண்மை இயக்குநர் எஸ்.ராமலிங்கம் வாழ்த்து தெரிவித்துள்ளார். சதர்ன் ரயில்வே மஸ்தூர் யூனியன் பொதுச் செயலாளர் என்.கண்ணையா, 14 லட்சம் தொழிலாளர்கள் உறுப்பினராக உள்ள அகில இந்திய ரயில்வே ஊழியர்கள் பெடரேஷன் தலைவராக இருந்து வருகிறார். இது அகில இந்திய அளவில் ரயில்வேயில் ஏ.ஐ.ஆர்.எப் தமிழ்நாட்டிற்கு கிடைத்த பெருமை.

இதற்கு முன் இதே தலைவர் பதவியில் இருந்து குடியரசு தலைவரானவர் வி.வி.கிரி, ரயில்வே அமைச்சரானவர் ஜார்ஜ் பெர்னாண்டஸ். 1952ல் பிரதமராக இருந்த நேரு மத்திய அரசு தொழிலாளர்கள் கூட்டு ஆலோசனை குழுவை தொடங்கினர். அதில் 47 லட்சம் மத்திய அரசு ஊழியர்கள் உறுப்பினர்களாக உள்ளனர். இதன் இணைச் செயலாளராகவும் என்.கண்ணையா பதவி வகித்து வருகிறார். 80 லட்சம் அமைப்பு மற்றும் அமைப்புசாரா தொழிலாளர்கள் உறுப்பினராக உள்ள இந்து மஸ்தூர் சபா தொழிற்சங்க தேசிய செயலாளராகவும், உச்ச நீதிமன்ற நீதிபதி தலைமையில் உள்ள ஒன்றிய அரசு ஊழியர்கள் ஒழுங்கின்மை நடுவர் குழு செயலாளராகவும் உள்ளார்.

இந்நிலையில் சதர்ன் ரயில்வே மஸ்தூர் யூனியனில் தொடர்ந்து 25வது ஆண்டாக அவர் பொதுச் செயலாளராக தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளார். தெற்கு ரயில்வேயில் ஒரு லட்சம் ஊழியர்கள் எஸ்.ஆர்.எம்.யு யூனியனில் உறுப்பினராக உள்ளனர். இவருடைய கட்டுப்பாட்டில் 2 ரயில்வே லோன் சொசைட்டிகள் மிகப்பெரிய அளவில் இயங்கிக் கொண்டிருக்கிறது. இதில் ஒன்று திருச்சியை மையமாகக் கொண்ட தெற்கு ரயில்வே லோன் சொசைட்டியாகும். மற்றொன்று சென்னையை தலைமையிடமாக கொண்ட சென்னை ரயில்வே அர்பன் வங்கியாகும். பொதுச் செயலாளராக என். கண்ணையாவுக்கு திருச்சி தெற்கு ரயில்வே லோன் சொசைட்டி மேலாண்மை இயக்குநர் எஸ்.ராமலிங்கம் வாழ்த்து தெரிவித்துள்ளார்.

The post 25வது ஆண்டாக சதர்ன் ரயில்வே மஸ்தூர் யூனியன் பொதுச்செயலாளராக என்.கண்ணையா தேர்வு: லோன் சொசைட்டி மேலாண்மை இயக்குநர் வாழ்த்து appeared first on Dinakaran.

Related Stories: