ராஜேஷ்ராய் என்ற செங்கல்சூளை அதிபரின் வீட்டிற்கு அவரை கடத்திச்சென்ற கும்பல் அங்கு ராஜேஷ்ராய் மகள் சாந்தினியுடன், பள்ளி ஆசிரியர் கவுதம் குமாரை கட்டாயமாக திருமணம் செய்து வைத்துள்ளனர். இதை ஏற்க மறுத்த கவுதம் குமார் ,நவாடா ராணுவ வீரருக்கும் லக்கிசராய் பெண்ணுக்கும் இடையே இதே போல் பத்து வருடத்திற்கு முன்பு நடந்த கட்டாயத் திருமணத்தை பாட்னா உயர் நீதிமன்றம் ரத்து செய்ததை அவர்களுக்கு எடுத்துக்கூறியிருக்கிறார். ஆனால் அவர்கள் இதைப்பற்றி கவலைப்படாமல் கவுதம்குமாரை அடித்து துன்புறுத்தி மிரட்டியதால் அவர் வேறுவழியின்றி அவரது மகளுக்கு தாலி கட்டியிருக்கிறார். இது குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
The post அரசு வேல கிடச்சா ஒடனே கிட்னாவா…. பீகார் ஆசிரியருக்கு கட்டாய திருமணம்: துப்பாக்கி முனையில் கடத்தி மகளுக்கு திருமணம் செய்து வைத்த தொழில் அதிபர் appeared first on Dinakaran.
