பாசிச கூட்டத்தின் கூடாரத்தை இழுத்து மூடி, மாநில உரிமை மீட்போம் : உதயநிதி ஸ்டாலின்

சென்னை : பாசிச கூட்டத்தின் கூடாரத்தை இழுத்து மூடி, மாநில உரிமை மீட்போம் என அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் குறிப்பிட்டுள்ளார். இது தொடர்பாக உதயநிதி ஸ்டாலின் டுவிட்டர் பக்கத்தில் வெளியிட்டுள்ள பதிவில், தி.மு.கழக இளைஞர் அணியின் 2 ஆவது மாநில மாநாடு – மாநில உரிமை மீட்பு முழக்கமாக சேலத்தில் எதிர்வரும் 17-ஆம் தேதியன்று நடைபெறவுள்ளது.

முத்தமிழறிஞர் கலைஞர் அவர்களின் நூற்றாண்டில் – இந்திய ஒன்றியமே திரும்பி பார்க்கிற வகையில் நடைபெறவுள்ள, இந்த பெருமைக்குரிய மாநாட்டுக்கான அழைப்பிதழை கழகத்தலைவர் – மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அவர்களிடமும் கழக பொதுச் செயலாளர் – மாண்புமிகு நீர்வளத்துறை அமைச்சர் துரைமுருகன் அவர்களிடமும் இன்று வழங்கி வாழ்த்து பெற்றோம்.

திமுக இளைஞரணி மாநில மாநாட்டின் வெற்றிச் செய்தி – எட்டுத்திக்கும் எதிரொலிக்கும் வகையில் செயலாற்றுவோம். பாசிச கூட்டத்தின் கூடாரத்தை இழுத்து மூடி – மாநில உரிமை மீட்போம்! இவ்வாறு குறிப்பிட்டுள்ளார்.

The post பாசிச கூட்டத்தின் கூடாரத்தை இழுத்து மூடி, மாநில உரிமை மீட்போம் : உதயநிதி ஸ்டாலின் appeared first on Dinakaran.

Related Stories: