மேட்டுப்பாளையம் காவல் நிலையத்தில் குரங்குகள் அட்டகாசம்

மேட்டுப்பாளையம்,நவ.30: மேட்டுப்பாளையம் வனப்பகுதியில் இருந்து வெளியேறிய குரங்குகள் கூட்டம் ஒன்று காவல் நிலையத்தில் முகாமிட்டுள்ளது.இந்த குரங்குகள் அங்கிருக்கும் மின்சார வயர்கள், நிறுத்தி இருக்கும் வாகனங்களை சேதப்படுத்தி வருகின்றன.

மேலும்,புகாரளிக்க நாள்தோறும் பொதுமக்களில் பலர் இந்த காவல் நிலையத்திற்கு வருகை தரும் நிலையில் காவல் நிலையத்தில் முகாமிட்டுள்ள குரங்குகள் புகாரர்களை மிரட்டுவதும், விரட்டுவதும் வாடிக்கையாக உள்ளது. காவல் நிலையத்தை ஒட்டியவாறு காவலர் குடியிருப்பும் அமைந்துள்ளது.இங்கு காவலர்கள் தங்களது குடும்பத்தினருடன் வசித்து வருகின்றனர்.

காவலர் குடியிருப்பில் வசித்து வரும் குழந்தைகள் அங்குள்ள பூங்காவில் விளையாடச் செல்லும் பொழுது அவர்களையும் குரங்குகள் கூட்டம் துரத்துகின்றது. புகார் கொடுக்க வரும் பொது மக்களையும் குரங்குகள் விரட்டி வருகின்றன.
இதனால் பொதுமக்கள் அச்சத்துடனே காவல் நிலையம் வர வேண்டிய சூழல் ஏற்பட்டுள்ளது. எனவே, வனத்துறையினர் கூண்டு வைத்து காவல் நிலையத்தில் முகாமிட்டுள்ள குரங்குகளை பிடித்து வனப்பகுதிக்குள் கொண்டு சென்று விட வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

The post மேட்டுப்பாளையம் காவல் நிலையத்தில் குரங்குகள் அட்டகாசம் appeared first on Dinakaran.

Related Stories: