×

காஞ்சிபுரத்தில் தனியார் துறை வேலை வாய்ப்பு முகாம்

காஞ்சிபுரம், நவ.30: காஞ்சிபுரம் மாவட்ட கலெக்டர் கலைச்செல்வி மோகன் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது: தமிழ்நாடு அரசு முன்னாள் முதல்வர் கலைஞரின் நூற்றாண்டு விழா கொண்டாட்டத்தின் ஒரு பகுதியாக 100 சிறப்பு தனியார் துறை வேலைவாய்ப்பு முகாம்களை தமிழ்நாடு முழுவதும் நடத்திட அரசால் அறிவுறுத்தப்பட்டுள்ளது. இதனைத்தொடர்ந்து, காஞ்சிபுரம் மாவட்டத்தில் உள்ள படித்து வேலைவாய்ப்பற்ற இளைஞர்கள் பயன்பெறும் வகையில், காஞ்சிபுரம் மாவட்ட நிர்வாகம் மற்றும் மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டும் மையம், காஞ்சிபுரம் இணைந்து மாபெரும் தனியார் துறை வேலைவாய்ப்பு முகாமினை பாரதிதாசன் மெட்ரிக்குலேஷன் மேல்நிலைப்பள்ளி, காஞ்சிபுரத்தில் டிச.2ம் தேதி நடத்திட உத்தேசிக்கப்பட்டுள்ளது.

இம்முகாமில், 100க்கும் மேற்பட்ட தனியார் நிறுவனங்கள் கலந்துக்கொண்டு தங்களுக்கான மனித வள தேவைக்கு நேர்முக தேர்வினை நடத்த உள்ளனர். அதில் பட்டதாரிகள், டிப்ளமோ, ஐடிஐ, 12வது மற்றும் 10ம் வகுப்பு படித்தவர்கள் போன்றவர்களை தேர்ந்தெடுக்க உள்ளனர். 18 முதல் 35 வயது வரை உள்ள வேலை நாடுநர்கள் தங்களுடைய கல்வி சான்றிதழ்கள், பாஸ்போர்ட் அளவிலான புகைப்படத்துடன் டிச.2ம் தேதி காலை 9 மணிக்கு பாரதிதாசன் மெட்ரிக்குலேஷன் மேல்நிலைப்பள்ளி, காஞ்சிபுரத்தில் நேரில் வந்து வேலைவாய்ப்பு முகாமில் கலந்து கொண்டு பயன் பெறலாம். இது தொடர்பாக ஏதேனும் சந்தேகங்கள் இருப்பின் 044-2723 7124 என்ற தொலைபேசி எண் வாயிலாக கேட்டறிந்து பயன் பெறலாம் என மாவட்ட கலைச்செல்வி மோகன் தெரிவித்துள்ளார்.

The post காஞ்சிபுரத்தில் தனியார் துறை வேலை வாய்ப்பு முகாம் appeared first on Dinakaran.

Tags : Kancheepuram ,Kanchipuram ,Kanchipuram District ,Collector ,Kalachelvi Mohan ,Former ,Chief Minister ,Tamil Nadu Government ,Dinakaran ,
× RELATED காஞ்சிபுரம் மாவட்டத்தில் 18 இடங்களில்...